Wednesday, March 15, 2023

12. ஆதிபர்வம் - 10. மூன்று சகோதரர்கள்

 சந்தனு சத்தியவதியை மணந்து கொண்டான். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீரியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

சந்தனுவின் மரணத்திற்குப் பிறகு, பீஷ்மர் சித்ராங்கதனை அரியணையில் அமர்த்தினார். சித்ராங்கதன் பெரும் பராக்கிரமசாலி. அவன் பல அரசர்களை வென்றான்.

சித்ராங்தகனை எந்த மனிதராலும் வெல்ல முடியாது என்பதும், அசுரர்கள் (அசுரர்கள்) மற்றும் தேவர்கள் (வானவர்கள்) மட்டுமே அவனை வெல்ல முடியும் என்பதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஒருமுறை ஒரு கந்தர்வன் சித்ராங்கதனைத் தன்னுடன் சண்டையிடுமாறு சவால் விடுத்தான். சித்ராங்கதன் அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டான். இருவரும் சரஸ்வதி நதிக்கரையில் மூன்று ஆண்டுகள் சண்டையிட்டனர். போரின் இறுதியில், சித்ராங்கதன் அவனை விட அதிக வலிமை வாய்ந்த அந்த கந்தர்வனால் கொல்லப்பட்டான்.

சித்ராங்கதனுக்கான இறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டதும், பீஷ்மர் விசித்திரவீரியனை அரியணையில் அமர்த்தினார். விசித்ரவீர்யன் ஆட்சியின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குச் சிறிய வயதினனாக இருந்ததால், பீஷ்மர் தனது மாற்றாந்தாய் சத்தியவதியின் தலைமையில் நாட்டின் ஆட்சியை நடத்தி வந்தார்

விசித்ரவீரியன் திருமண வயதை அடைந்ததும், பீஷ்மர் அவனுக்குத் தகுந்த இளவரசியைத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். 

காசி அரசர் தனது மூன்று அழகான மகள்களின் சுயம்வரத்துக்கு (சுயம்வரம் என்பது ஒரு அரசகுமாரி தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி வந்திருக்கும் அரசர்கள். இளவரசர்கள் ஒருவருக்கு மாலையிட்டு, அவரைத் தன் கணவராகத் தேர்ந்தெடுக்கும் ஒரு முறை)) ஏற்பாடு செய்ததாக பீஷ்மர் அறிந்தார்.

பீஷ்மர் விசித்திரவீரியனின் பிரதிநிதியாக சுயம்வரத்திற்கு செல்லத் தீர்மானித்தார். இதை சத்தியவதியிடம் தெரிவித்து, அவருடைய ஒப்புதலைப் பெற்ற பிறகு சுயம்வரத்துக்குச் சென்றார்.

சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பல அரசர்கள் அரசவையில் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் யார் என்பதை மணப்பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மன்னர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பீஷ்மரின் பெயர் சொல்லப்பட்டவுடன், அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து, மணமகள்களின் தந்தையான காசி மன்னனிடம் எட்டு வகையான திருமணங்களைப் பற்றிக் கூறினார், ஒரு அரசன் தான் மணக்க விரும்பும் பெண்ணை விலைமதிப்பற்ற சொத்தாகக் கருதினால், அவன் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முடியும் என்று முனிவர்கள் கூறியிருப்பதை அவர் அவனுக்குச் சுட்டிக்காட்டினார். 

பின்னர் பீஷ்மர் மூன்று மணப்பெண்களையும் அழைத்துச் சென்று தனது தேரில் ஏற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த அரசர்களிடம் "உங்களால் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்!" என்று சவால் விடுத்தார்.

கூடியிருந்த மன்னர்களில் பலர் தங்கள் ஆயுதங்களை உருவி எடுத்துக் கொண்டு பீஷ்மருடன் போரிடத் தொடங்கினர். பீஷ்மர் அவர்களுடைய ஆயுதங்களை அழித்து, அவர்களைக் காயப்படுத்தி அவர்களை விரட்டினார்.

சல்ய மன்னன் மட்டும் எளிதில் விட்டுக் கொடுக்காமல் பீஷ்மரிடம் தொடர்ந்து சண்டையிட்டான். மற்ற மன்னர்கள் அந்தச் சண்டையை வேடிக்கை பார்த்தபடி நின்றனர். சண்டையில் பீஷ்மர் சல்யனை வீழ்த்தினார், ஆனால் அவனைக் கொல்லாமல் விட்டார். தோல்வியடைந்த சல்யன் தன் நாட்டுக்குத் திரும்பினான்.

பீஷ்மர் மூன்று இளம் பெண்களையும் குரு ராஜ்ஜியத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்து வந்து தனது மாற்றாந்தாய் மகன் விசித்ரவீரியனிடம் அளித்தார். சத்தியவதியுடன் கலந்தாலோசித்த பிறகு, விசித்திரவீரியன் மூன்று பெண்களையும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​மூன்று பெண்களில் மூத்தவளான அம்பா, பீஷ்மரிடம் வந்து, “நான் ஏற்கனவே சௌப அரசரை என் கணவனாகத் தேர்ந்தெடுத்துவிட்டேன், அவரும் என்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். என் தந்தையும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார். சுயம்வரத்தின்போது நான் அவரைத் தேர்ந்தெடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. நீங்கள் நீதி, ஒழுக்கம் இவை பற்றி எல்லாம் தெரிந்தவர். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்” என்றாள்.

நல்லொழுக்கங்களைக் கொண்ட, வேதங்களை நன்கு அறிந்த பிராமணர்களிடம் பீஷ்மர் ஆலோசனை கேட்டார். அதற்குப் பிறகு, அவர் அம்பாவிடம் சென்று, "உன் விருப்பம் எதுவோ அதன்படி நடந்து கொள். அதற்கு உனக்கு முழு சுதந்தரம் உண்டு!" என்று கூறினார்.

அம்பா அரண்மனையை விட்டு வெளியேறித் தன் காதலனைச் சந்திக்கச் சென்றாள்.

விசித்ரவீரியனுக்கும் மற்ற இரண்டு இளவரசிகளான அம்பிகா, அம்பாலிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

விசித்ரவீரியன் ஏழு வருடங்கள் தன் இரு மனைவியருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அதற்குப் பிறகு, அவன் ஒரு கொடிய நோயால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

தனது இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே மறைந்தது, குரு வம்சத்துக்கு வாரிசு இல்லாமல் போனது, எஞ்சியிருக்கும் ஒரே இளவரசன் பீஷ்மனும் அரசனாகும் உரிமையைத் துறந்தது ஆகிய நிகழ்வுகளால் சத்தியவதி சோகத்தில் மூழ்கினாள்.

குரு வம்சம் சந்ததி இல்லாமல் துண்டிக்கப்பட்டு, அதனால் பீஷ்மரின் முன்னோர்கள் நரகத்தில் தள்ளப்படக் கூடாது என்பதற்காக பீஷ்மர் விதவைகளாகி விட்ட விசித்திரவீரியனின் இரண்டு மனைவிகள் மூலம் தங்கள் சந்ததியை வளர்க்க வேண்டும், அல்லது தன் சபதத்தைக் கைவிட்டு அரியணை ஏற வேண்டும், அல்லது வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று பீஷ்மரிடம் சத்தியவதி இறைஞ்சினாள். 

இந்த அறிவுரையை அங்கிருந்த அறிஞர்களும் ஞானிகளும் ஆதரித்தனர்.

இதற்கு பீஷ்மர் “அம்மா,  நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவது பாரம்பரியத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தாலும், நான் பிரம்மச்சரியத்தை ஏற்றுக் கொண்டதாலும், அரியணை ஏறமாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டதாலும் என்னால் அவ்வாறு செய்ய முடியாது. எந்தச் சூழலிலும் நான் எனது உறுதிமொழியிலிருந்து விலக மாட்டேன்!" என்று மறுமொழி அளித்தார்.

"இந்த உறுதியை நான் உங்கள் தந்தைக்கு அளித்திருக்கிறேன். ஒரு க்ஷத்ரியர் (வீரர் இனத்தைச் சேர்ந்தவர்) ஒருபோதும் நம்பிக்கை மீறலில் ஈடுபடக்  கூடாது" என்று அவர் சுட்டிக் காட்டினார்.

 அது போன்ற சூழ்நிலைகளில் பின்பற்றப்பட வேண்டிய சரியான வழி என்ன என்பதை அறிய வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை பீஷ்மர் மேற்கோள் காட்டினார். 

முதலில் ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமனின் கதையை பீஷ்மர் எடுத்துக் கூறினார்.  

"ஹைஹயா என்ற மன்னனின் மூன்று மகன்களால் தன் தந்தை கொல்லப்பட்டதால் கோபமடைந்த பரசுராமர் அந்த மன்னனைக் கொன்றதுடன், க்ஷத்திரிய இனத்தையே முழுமையாக அழித்தார்.

"க்ஷத்திரிய மன்னர்களின் விதவைகள், தங்கள் வம்சம் தொடர வேண்டும் என்பதற்காகத் தங்கள் வம்சத்தை பிராமணர்களால் மூலம் வளர்த்தனர். அவர்கள் காமத்தினால் அப்படிச் செய்யவில்லை, தங்கள் வம்சம் தொடர வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தனர்.

"அவ்வாறு பெற்றெடுக்கப்பட்ட மகன் தன் உடல்ரீதியான தந்தையான பிராமணனுக்குச் சொந்தமானவன் அல்ல, தாயை மணந்த க்ஷத்திரியனுக்குச் சொந்தமானவன் என்று வேதங்கள் கூறுகின்றன."

பிறகு, பீஷ்மர் தீர்க்கதமஸ் முனிவர் தொடர்பான மற்றொரு வரலாற்று நிகழ்வை மேற்கோள் காட்டினார். 

"வாலி மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, தீர்க்கதமஸ் வாலியின் மனைவியான சுதேசனாவின் மூலம் ஐந்து மகன்களை அளித்தார். புகழ்பெற்றவர்களாக விளங்கிய இந்த மகன்கள் வாலியின் மகன்களாகவே கருதப்பட்டனர்."

இந்த முறையில் செயல்பட வேண்டும் என்று சத்தியவதியிடம் வலியுறுத்திய பீஷ்மர், விசித்ரவீரியனின் மனைவியர் மூலம்  சந்ததியை வளர்க்க ஒரு கற்றறிந்த பிராமணரை அழைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி தன் இளம் வயதில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி பீஷ்மரிடம் கூறினாள், 

“நான் இளம் பெண்ணாக இருந்தபோது, ​​யமுனை ஆற்றின் குறுக்கே பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக என் தந்தை வைத்திருந்த படகை ஓட்டிச் சென்று கொண்டிருந்தேன். 

"ஒருமுறை நான் பராசர முனிவரைப் படகில் அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அவருக்கு என்மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டது, நான் மறுத்தால் அவர் என்னைச் சபித்துவிடுவானோ என்ற பயத்தில் நான் அவர் ஆசைக்கு அடிபணிந்தேன். அப்போது என் என் உடலிலிலிருந்து ஒரு கடுமையான மீன் நெடி வீசும். அவர் அதைப் போகச் செய்து, இப்போது என்னிடமிருந்து வெளிப்படும் நறுமணத்தை அளித்தார்.

"ஆற்றின் நடுவே  இருந்த ஒரு தீவில் நான் அவருடைய குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, நான் மீண்டும் கன்னியாக மாறுவேன் என்று அவர் கூறினார். எனக்குப் பிறந்த பராசரரின் குழந்தை இப்போது ஒரு பெரிய முனிவராகி விட்டான். அவன் த்வைபாயனர் (தீவில் பிறந்தவன்) என்ற பெயரால் அறியப்படுகிறான். 

"அந்த மாமுனிவன் வேதங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளான். அதனால் அவரன் வியாசர் (பிரிப்பவர் அல்லது பகுப்பவர்) மற்றும் வேதவியாசர் என்றும் அழைக்கப்படுகிறான். 

"அவன் பிறந்த உடனேயே தன் தந்தையுடன் சென்று விட்டான். எனக்கு அவனுடைய உதவி தேவைப்படும்போது அவனை நினைக்கும்படி அவன் என்னிடம் கூறி இருக்கிறான். உன் சகோதரனின் மனைவியர் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கும்படி அவனிடம் கேட்கலாம் என்று நினைக்கிறேன். என் யோசனை சரியென்று நீ கருதினால் நான் அவனை அழைக்கிறேன்."

வியாசர் சிறந்த நற்பண்புகள் மற்றும் மகத்தான சக்தி கொண்ட துறவி என்று பீஷ்மர் அறிந்திருந்ததால், சத்தியவதியின் யோசனையை அவர் ஏற்றுக் கொண்டார்.

சத்தியவதி வியாசரை நினைத்தாள், அவளுடைய அழைப்பை உணர்ந்த வியாசர் உடனடியாக அவள் முன் தோன்றினார்.

வியாசரை உரிய மரியாதையுடன் வரவேற்று, அவருக்கு உணவு அளித்த பிறகு, சத்தியவதி, அவருடைய ஒன்று விட்ட சகோதரரான விசித்ரவீரியனின் மனைவியர் மூலம்  குழந்தைகளைப் பெற்றுத் தரும்படி அவரிடம் கேட்டுக் கொண்டாள்.

இது வழக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை என்று கூறித் தன் தாயின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வியாசர், அம்பிகா, அம்பாலிகா இருவரும் தான் கூறும் விரதத்தை ஒரு வருடம்  கடைப்பிடித்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பிறகுதான் தன்னால் அவர்களுக்குக் குழந்தைகளை அளிக்க முடியும் என்றும் கூறினார்.

குரு வம்சம் நீண்ட காலமாக வாரிசு இல்லாமல் இருப்பதால், வம்சத்தைப் பெருக்குவதற்கான முயற்சிகள் உடனே செய்யப்பட வேண்டும் என்று சத்தியவதி கோரினாள்.

அப்படியானால் அந்தப் பெண்கள் தன் அருவருப்பான தோற்றத்தையும், தன் உடலிலிருந்து வளிப்படும் கடும் துர்நாற்றத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறிய வியாசர், யவ்வாறு செய்வது அந்தப் பெண்களுக்கு மிகவும் கடுமையான தவமாக இருக்கும் என்றார். 

நல்ல ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து கொண்டு, படுக்கை அறையில் தனக்காகக் காத்திருக்கும்படி தன் மருமகள்களிடம் கூறுமாறு.வியசர் சத்தியவதியிடம் கூறினார்.

சத்தியவதி தன் மூத்த மருமகள் அம்பிகாவிடம் சென்று, குரு வம்சம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த யோசனைக்குச் சம்மதிக்கும்படி அவளிடம் வற்புறுத்தினாள்.

சத்தியவதி திரும்பத் திரும்ப வலியுறுத்திய பிறகு அம்பிகா இதற்கு ஒப்புக் கொண்டாள். 

படுக்கையறைக்குள் வியாசர் நுழையும் போது அம்பிகா படுக்கையில் காத்திருந்தாள். அவருடைய சிடுக்கான தலைமுடியையும், அருவருப்பானன தோற்றத்தையும் கண்டு அவள் கண்களை மூடிக் கொண்டாள். வியாசர் அவளுடன் கூடி இருந்தபோது அவள் ஒருமுறை கூடத் தன் கண்களைத் திறக்கவில்லை.

வியாசர் வெளியே வந்ததும், சத்தியவதி அவரைச் சந்தித்தாள். 

"அம்பிகாவுக்கு வலிமையான, வீரம் மிக்க, புத்திசாலி மகன் பிறப்பான் ஆனால் தன் தாயின் தவறினால் அவன் கண்பார்வை இல்லாதவனகப் பிறப்பான்!" என்று வியாசர் அவளிடம் கூறினார்.

இதைக் கேட்ட சத்தியவதி வருத்தமடைந்தாள். பார்வையற்ற ஒருவனால் ராஜ்யத்தைக் காக்க முடியாது என்பதால் அரசனாவதற்கு இன்னொரு மகனைக் கொடுக்கும்படி அவள் வியாசரிடம் கேட்டாள். வியாசர் 'அப்படியே ஆகட்டும்' என்று கூறி விட்டுச் சென்றார். உரிய காலத்தில், அம்பிகா ஒரு பார்வையற்ற குழந்தையைப் பெற்றெடுத்தாரள்.

தன் இளைய மருமகள் அம்பாலிகாவின் சம்மதத்தைப் பெற்ற பிறகு, சத்தியவதி மீண்டும் வியாசரை அழைத்தாள். வியாசரின் தோற்றத்தால் திகிலடைந்த அம்பாலிகா, பயத்தால் வெளிறினாள்.

வியாசர் சத்தியவதியிடம் "அம்பாலிகாவின் மகன் வெளிர் நிறமாக இருப்பான்" என்று கூறி விட்டு, அவனை பாண்டு (வெளிர் நிறத்தவன்) என்று அழைக்குமாறு பரிந்துரைத்தார்.

இந்த முறையும் ஏமாற்றமடைந்த சத்தியவதி இன்னும் ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்க, வியாசர் மீண்டும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி விட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.

சிறிது காலம்  கழித்து, சத்தியவதி அம்பிகாவிடம் இன்னொரு குழந்தை பெறுவதற்காக மீண்டும் வியாசருடன் இணையுமாறு வேண்டினாள்.

முனிவரின் அருவருப்பான தோற்றத்தையும் அவரிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான வாசனையையும் நினைவு கூர்ந்த அம்பிகா அவரைத் தவிர்க்க விரும்பினாள். அவள் அழகு மிகுந்த தன் பணிப்பெண் ஒருத்தியைத் தன் ஆபரணங்களால் அலங்கரித்து வியாசரிடம் அனுப்பினாள்.

வியாசர் வந்ததும், பணிப்பெண் அவருக்கு வணக்கம் செலுத்தி, மரியாதையுடன் உபசரித்து, மகிழ்ச்சியுடன் காத்திருந்தாள். 

அவளைக் கண்டு மகிழ்ந்த வியாசர், "பணிப்பெண்ணே, இனி நீ அடிமையாக இருக்கமாட்டாய். உலகின் மிகச் சிறந்த அறிவாளி  என்று அறியப்படும் நல்லொழுக்கமுள்ள குழந்தையை நீ பெற்றெடுப்பாய்" என்றார்.

வியாசர் சத்தியவதியிடம் தான் அம்பிகாவால் ஏமாற்றப்பட்டதையும், அவள் சூத்திர இனப் பெண் மூலம் மகனைப் பெற்றெடுக்கச் செய்ததையும் கூறி விட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

பணிப்பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கு விதுரன் என்று பெயரிடப்பட்டது. வியாசரின் மகன் என்பதால் அவன் திருதராஷ்டிரன், பாண்டு இவர்களின் சகோதரனாகவே கருதப்பட்டான்.

விதுரன் ஆசைகளிலிருந்தும், உணர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவன். அவன் அரசாங்கத்தை நடத்துவதற்கான விதிகளையும், வழிமுறைகளையும் நன்கு அறிந்தவன். மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பூமியில் பிறந்த தர்ம தேவன்தான் விதுரன்.

ஆதிபர்வம் - 9. பீஷ்மரின் சபதம்

Tuesday, March 14, 2023

11. ஆதிபர்வம் - 9. பீஷ்மரின் சபதம்

மன்னன் சந்தனு ஞானம், நல்லொழுக்கம், நேர்மை ஆகிய பண்புகளுக்காகப் பெயர் பெற்றிருந்தான். 

குரு வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தில் இருந்து கொண்டு அவன் உலகம் முழுவதையும் ஆண்டான்.

சந்தனு ஒரு பேரரசனாக இருந்தும் மற்ற அரசர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருந்ததால் அண்டை நாடுகளிலிருந்த மன்னர்கள் பயமின்றி வாழ்ந்தனர்.

ரு நாள், சந்தனு வேட்டையின்போது ஒரு மானின் மீது அம்பைச் செலுத்திய பின், தப்பி ஓடிய மானைத் துரத்திக் கொண்டு கங்கைக் கரை ஓரமாக ஓடியபோது, ​​ஒரு இடத்தில் கங்கை நதி  ஆழமில்லாமல் இருப்பதைக் கண்டு வியந்தான்.

அப்போது வலிமையான உருவமும், அழகான தோற்றமும் கொண்ட ஒரு இளைஞன் ஒரு அஸ்திரத்தைப் (அஸ்திரம் என்பது சிறப்பான சக்தி கொண்ட அம்பு) பயன்படுத்தி நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி இருப்பதைக் கண்டான்.

அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சாந்தனுவின் மகன் தேவவிரதன்தான்! தேவவிரதன் (தன் தாய் கங்கை தன்னிடம் கூறியிருந்த விவரங்களைக் கொண்டு) சந்தனுவை அடையாளம் கண்டுகொண்டாலும், சந்தனுவால் தன் மகனை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

சற்று நேரத்துக்குப் பிறகு, சந்தனுவின் பார்வையிலிருந்து தேவவிரதன் மறைந்து விட்டான். தான் பார்த்த அந்த இளைஞன் தன் சொந்த மகன்தான் என்ற உண்மை சந்தனுவுக்கு அப்போதுதான் புலப்பட்டது. 

தன் மகனைக் காட்டும்படி சந்தனு தன் மனைவி கங்கையிடம் மானசீகமாக முறையிட்டான். அவனுடைய முறையீட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில். கங்கை, தேவவிரதனுடன் சந்தனுவின் முன் தோன்றினாள். 

தான் முன்பு சந்தனுவுக்கு வாக்களித்திருந்தபடி தேவவிரதனை அவன் தந்தையான சந்தனுவிடம் கங்கை ஒப்படைத்தாள்.

“அரசே, இதோ உங்கள் மகன் தேவவிரதன். இவன் வசிஷ்ட முனிவரிடம் வேதங்களைக் கற்றிருக்கிறான். ஆயுதம் பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி பெற்றுள்ளான். ஒரு அரசனின் கடமைகளைப் பற்றி அறிய வேண்டிய எல்லாக் கல்வியையும் இவன் பெற்றிருக்கிறான். நான் கொடுத்த வாக்கின்படி அவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்!” என்றாள் கங்கை.

பிறகு கங்கை சந்தனுவிடம் விடைபெற்றுத் தன் இருப்பிடத்துக்குச் சென்று விட்டாள். சந்தனு தேவவிரதனைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, தனது அமைச்சர்கள் மற்றும் பிறருக்கு அறிமுகப்படுத்தி, அவனைத் தனது வாரிசாக அறிவித்தான்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், சந்தனு யமுனைக் கரையில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு இனிமையான நறுமணத்தை உணர்ந்தான். அந்த நறுமணம் வந்த இடத்தைத் தேடி அவன் சென்றபோது, ​அற்புதமான அழகு கொண்ட ஒரு இளம் பெண்ணிடமிருந்து அந்த நறுமணம் வீசுவதைக் கண்டான்.

சாந்தனு அந்தப் பெண்ணிடம் சென்று அவள் யார் என்று வினவினான். மீனவத் தலைவரின் மகள் சத்தியவதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், தான் படகோட்டுபவள் என்றும், ஆட்களைப் படகில்  ஏற்றி அக்கறைக்குக் கொண்டு விடும் தொழிலில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினாள்.

சந்தனு சத்தியவதியின் தந்தையான மீனவத் தலைவரைச் சந்தித்து அவர் மகளைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கோரினான்.

தன் மகளை சந்தனுவுக்குத் திருமணம் செய்து வைப்பதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறிய மீனவத் தலைவர், ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் மகன் சந்தனுவின் வாரிசாக அரியணை ஏறுவான் என்று சந்தனு உறுதிமொழி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

அந்த நிபந்தனையை ஏற்க விரும்பாத சந்தனு அரண்மனைக்குத் திரும்பினான். இருப்பினும், மீனவப் பெண்ணான சத்யவதியை அவனால் மறக்க முடியவில்லை. அவளை அடைய முடியாததை நினைத்து அவன் எப்போதும் ஏமாற்றமும், சோர்வும் மிகுந்த மனநிலையில் இருந்தான். இதை கவனித்த தேவவிரதன், தந்தையிடம் அவருடைய சோகமான மனநிலைக்கான காரணத்தைக் கேட்டான்.

“நீ என் வாரிசு. எனக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை. ஆனால் ஒரு மகனை மட்டுமே பெற்றால் அது மகன் இல்லாததற்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நீ வீரச் செயல்களில் ஈடுபட்டு வருகிறாய். நீ போரில் கொல்லப்படலாம். உனக்கு ஏதாவது நேர்ந்தால், பரத வம்சத்துக்கு என்ன ஆகுமோ என்றுதான் நான் கவலைப்படுகிறேன்!" என்று பதிலளித்தான் சந்தனு.

தேவவிரதன் அறிவுக் கூர்மை உள்ளவனாக இருந்ததால், தன் தந்தை தன்னுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்க வைக்கும் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டார் என்பதை உணர்ந்தான்.

 மன்னரின் துயரத்துக்கான காரணம் யாருக்கேனும் தெரியுமா என்பது குறித்து  தேவவிரதன் அமைச்சர்களிடம் விசாரிச்சான்.

சந்தனு சத்தியவதியின் தந்தையைச் சந்தித்தபோது சந்தனுவுடன் இருந்த அமைச்சர், சத்தியவதியைத் திருமணம் செய்து கொள்ள மன்னர் விரும்பியதையும், அவளை அரசனுக்குத் திருமணம் செய்து வைக்க அவள் தந்தை விதித்த நிபந்தனையையும் தேவவிரதனிடம் கூறினார்.

இந்த உண்மையை அறிந்து கொண்டதும், தேவவிரதன், சில க்ஷத்திரியத் தலைவர்களுடன், மீனவத் தலைவரைச் சென்று சந்தித்து, அவருடைய மகள் சத்தியவதியைத் தன் தந்தை சந்தனுவுக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு வேண்டினான். 

தன் மகளுக்குப் பிறக்கும் மகன் அரியணை ஏற வேண்டும் என்ற நிபந்தனையை மீனவத் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சத்தியவதியின் மகன் அரியணை ஏறும் வகையில் தன் அரசுரிமையைத் துறப்பதாக தேவவிரதன் சபதம் செய்தான். 

தேவவிரதனின் தியாகத்தைப் பாராட்டிய மீனவத் தலைவர், “நீங்கள் உங்கள் வாக்கைக் காப்பாற்றுவீர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், உங்கள் மகன்கள் அரியணைக்கு உரிமை கோர மாட்டார்கள் என்று நான் எப்படி உறுதியாக இருக்க முடியும்?" என்றார்.

அதைக் கேட்ட தேவவிரதன், “இந்தக் கணத்திலிருந்து நான் பிரம்மச்சரிய (பிரம்மச்சரியம்) சபதம் செய்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன், குழந்தைகளைப் பெறவும் மாட்டேன்." என்று சபதம் செய்தார்.

தேவவிரதன் இந்த வார்த்தைகளைக் கூறியவுடன், விண்ணுலகிலிருந்து வானவர்களும், முனிவர்களும் அவர்மீது பூமழை பொழிந்தனர்.

"நீ பீஷ்மன் (பயங்கரமான - ஒரு பெரிய சாதனையைச் செய்தவன்)" என்று வானத்திலிருந்து பல குரல்கள் ஒன்றாக இணைந்து ஒலித்தன.

சத்தியவதியின் தந்தை திருமணத்துக்கு ஒப்புக் கொண்டு, பீஷ்மரிடம் “நான் என் மகளை உன் தந்தைக்குக் கொடுக்கிறேன்” என்று கூறினார்.

பீஷ்மர் சத்தியவதியிடம், "அம்மா, தயவுசெய்து தேரில் ஏறுங்கள், நம் வீட்டிற்குச் செல்லலாம்" என்று கூறினார்.

ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், பீஷ்மர் தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை விவரித்தார். இதைக் கேட்டதும் அரண்மனையில் கூடியிருந்தவர்கள், “நீங்கள் உண்மையிலேயே பீஷ்மர்தான்" என்று உரத்த குரலில் கூறினர்.

தன்னுடைய மகிழ்ச்சிக்காக தன் மகன் செய்த தியாகத்தால் நெகிழ்ந்த சந்தனு,"நீ விரும்பும் வரை உயிர் வாழ்வாய்! உன் ஒப்புதலைப் பெற்ற பின்னரே மரணம் உன்னை அணுகும்” என்று தேவவிரதனுக்கு வரம் அளித்தான். (பிற்காலத்தில், குருட்சேத்திரப் போரில் பீஷ்மர் அர்ஜுனனின் அம்புகளாலும், சிகண்டியின் அம்புகளாலும் துளைக்கப்பட்டபோது, ​​பீஷ்மர் இந்த வரத்தைப் பயன்படுத்தி, நல்ல நேரமான உத்தராயணம் வரும் வரை தனது மரணத்தைத் தள்ளி வைத்திருந்தார்)

இவ்வாறு, இளவரசன் தேவவிரதன் தன்னை பீஷ்மராக மாற்றிக் கொண்டான்.

ஹஸ்தினாபுரத்தின் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கும் மகத்தான தியாகத்தைச் செய்தவர் பீஷ்மர்.

ஆதிபர்வம் 10. மூன்று சகோதரர்கள்

ஆதிபர்வம் 8. அஷ்ட வசுக்கள்

Monday, March 13, 2023

10. ஆதி பர்வம் - 8. அஷ்ட வசுக்கள்

மழைக் கடவுளான வருணனின் மகனான வசிஷ்டர், கடுமையான தவத்தின் மூலம் உயர்ந்த நிலையை அடைந்த ஒரு சிறந்த முனிவர். பிற்காலத்தில் அவர் அபாவர் என்றும் அழைக்கப்பட்டார்.

வசிஷ்டர் மேரு மலையில் வசித்து வந்தார். அங்கேயே தவத்தில் ஈடுபட்டிருந்தார்.

தட்சனுக்கு சுரபி என்ற மகள் இருந்தாள், அவள் காசியப முனிவரை மணந்தாள். சுரபிக்கு நந்தினி என்ற பசு பிறந்தது. இந்த தெய்வீகப் பசு யார் தன்னிடம் எதைக் காட்டாலும் அதை அளிக்கும் வள்ளல் தன்மை கொண்டிருந்த வற்றாத செல்வப்பசுவாக இருந்தது.

வசிஷ்டர் தவம் செய்வது தொடர்பான தன் தினசரிக் கடன்களுக்கு உதவுவதற்காக நந்தினி என்ற இந்தப் பசுவைப் பயன்படுத்தி வந்தார். அவருக்கு ஹோமம் (அக்கினி யாகம்) செய்வதற்குத் தேவையான நெய் போன்றவற்றை நந்தினி அவருக்கு வழங்கி வந்தது. இந்தச் சடங்குகள் அவரைப் போன்ற முனிவர்களால் வழக்கமாகச் செய்யப்படுபவை.

வசிஷ்டரின் ஆசிரமத்தை வசிக்கும் இடமாகக் கொண்ட நந்தினி சுதந்திரமாகக் காடுகளில் சுற்றித் திரிந்தாள். கேட்டதையெல்லாம் வழங்கும் நந்தினின் தெய்வீக சக்திக்காக அவள் எல்லா முனிவர்களாலும் அதிகம் விரும்பப்பட்டாள்.

ஷ்ட வசுக்கள் என்ற எட்டு சகோதரர்களில் மூத்தவன் ப்ரிது. ஒருமுறை தங்கள் மனைவிமார்களுடன் காட்டுக்கு வந்தனர். அவர்கள் காட்டில் சுற்றித் திரிந்தபோது, ​​அற்புதமான தோற்றம் கொண்ட நந்தினியைக் கண்டனர்..

வசுக்களில் ஒருவனான தியுவின் மனைவி தன் கணவனிடம் நந்தினியைச் சுட்டிக் காட்டி அதைப் பற்றிக் கேட்டாள். அது வசிஷ்ட முனிவருக்கு சொந்தமான தெய்வீகப் பசு என்றும், அதன் பாலைக் குடிப்பவர்கள் பத்தாயிரம் ஆண்டுகள் இளமையை குன்றாமல் இருப்பார்கள் என்றும் தியு அவளிடம் கூறினான்.

உசினர முனிவரின் மகளும், புத்திசாலியும், உண்மையின் மீது பக்தி கொண்டவளுமான ஜிதாவதி என்ற ஒரு தோழி தனக்கு இருப்பதாக தியுவிடம் கூறிய அவள், ஜிதாவதிக்கு நந்தினியின் பாலைக் கொடுத்து அவள் நோய்நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ வகை செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தாள்.

தன் அழகிய மனைவியைத் திருப்திப்படுத்த விரும்பிய தியு தான் ஒரு பாவமான செயலைச் செய்யப் போகிறோம் என்பதை உணராமல், தன் சகோதரர்களின் உதவியுடன் நந்தினியைக் களவாடி எடுத்துச் சென்றான்.

வசிஷ்ட முனிவர் மாலையில் தனது இல்லத்திற்குத் திரும்பியபோது நந்தினியைக் காணவில்லை என்பதைக் கண்டார். தன் ஞான உணர்வின் மூலம், நடந்ததை அவர் அறிந்து கொண்டார். கோபமடைந்து, எட்டு வசுக்களும் பூமியில் பிறக்க வேண்டும் என்று அவர் சாபம் அளித்தார்.

முனிவரின் சாபத்தைப் பற்றி அறிந்ததும், வசுக்கள் பசுவை அவரிடம் திருப்பிக் கொடுத்துத் தங்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

தனது சாபத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறிய வசிஷ்டர், தியுவைத் தவிர மற்ற ஏழு சகோதரர்களும் பூமியில் பிறந்த ஒரு வருடத்திற்குள் சாபத்திலிருந்து விடுபடுவார்கள் என்று சாபத்தீன் தீவிரத்தைச் சற்றே குறைத்தார்.

இருப்பினும், முக்கியக் குற்றவாளியான தியூ பூமியில் நீண்ட காலம் வாழ வேண்டியிருக்கும். என்று கூறிய வசிஷ்டர், அவனுக்குக் குழந்தைகள் இருக்காது என்றும், அவன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பான் என்றும் கூறினார்.

சந்தனுவிடம் அஷ்ட வசுக்களின் கதையை விவரித்த கங்கை, தான் வசுக்களைச் சந்தித்ததையும், தாங்கள் மனிதர்களாகப் பிறக்கும்போது அவள் தங்களுக்குத் தாயாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அவளிடம் கேட்டுக் கொண்டதையும் கூறினாள்.

தன் குழந்தைக்கு காங்கேயன், தேவவிரதன் என்ற பெயர்களை கங்கை பரிந்துரைத்தாள். குழந்தை வளர்ந்து இளைஞனான பிறகு அவனை சந்தனுவிடம் திருப்பி அனுப்புவதாக உறுதியளித்து விட்டு, கங்கை குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

ஆதி பர்வம் - 9. பீஷ்மரின் சபதம்

ஆதி பர்வம் - 7. சந்தனு

9. ஆதி பர்வம் - 7. சந்தனு

பிரதீபன், ஒரு சக்திவாய்ந்த மன்னராக இருந்ததுடன், ஒரு துறவியாகவும் இருந்தார். அவர் அடிக்கடி கங்கை நதிக்கரையில் அமர்ந்து தவம் செய்வார்.

ஒரு நாள், அவர் ஆற்றங்கரையில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, ​​​​கங்கை ஒரு அழகான பெண் வடிவத்தை எடுத்து அவரது வலது மடியில் அமர்ந்தாள்.

மன்னன் அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது, ​​கங்கை தான் அவனை மணந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னாள்.

"வலது தொடை மகள்கள் மற்றும் மருமகள்கள் அமரும் இடம் - இடது தொடைதான் மனைவிக்கான இருக்கை" என்று பிரதீபா அவளிடம் கூறினார். கங்கை தன் வலது மடியில் அமர்ந்திருந்ததால், அவளால் தன் மனைவியாக முடியாது, என்று பிரதீபன் தெளிவுபடுத்தினார்.

"அப்படியானால் என்னை உங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்! நான் உங்கள் மகனை மகிழ்வித்து, அவனுக்குக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்து, அவன் சொர்க்கத்தை அடைய உதவுவேன்!" என்று கங்கை பிரதீபனிடம் வேண்டிக் கொண்டாள்.

ஆயினும் தன் செயல்களைப் பற்றி அவருடைய மகன் ஒருபோதும் கேள்வி கேட்கக்கூடாது என்றும் கங்கை பிரதீபாவிடம் கூறினாள். பிறகு அவள் தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டாள்.

சிறிது காலம் கழித்து, பிரதீபனுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரம்மாவின் சாபப்படி மகாபிஷாதான்அவருக்கு மகனாகப் பிறந்தான். அவனுக்கு சாந்தனு என்று பெயரிடப்பட்டது.‘சாந்தி’ என்ற சொல்லின்ன் அடிப்படையில் அமைந்த இந்தப் பெயர் அமைதி மற்றும் சமநிலையைக் குறிக்கும் விதத்தில் அளிக்கப்பட்டது - அதாவது பிரதிபாவின் மனநிலை!

சந்தனுவும் தன் தந்தையைப் போலவே நல்லொழுக்கமுள்ள மனிதனாக வளர்ந்தான்.

சந்தனு வாலிபப் பருவத்தை அடைந்ததும், அவன் தந்தை பிரதீபன் அவனிடம் “சிறிது கலத்துக்கு முன்பு, ஒரு அழகான இளம் பெண் என்னை அணுகி எனக்குப் பிறக்கப் போகும் மகனைத்  திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தாள். உனக்குக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்து உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்றாள். அவர் உன்னை அணுகி உன்னைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்தால், அவள் கோரிக்கையை ஏற்றுக் கொள். ஆனால், அவளுடைய எந்தச் செயலையும் நீ கேள்வி கேட்கக் கூடாது என்றும் அவள் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறாள்" என்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு, பிரதீபன் பின்னர் பிரதீபன் சந்தனுவுக்கு முடிசூட்டி, அவனை மன்னனாக்கி விட்டு,  தவம் செய்யக் காட்டுக்குச் சென்றார்.

சந்தனு மன்னன் வேட்டையாடுவதில்திக விருப்பம் கொண்டிருந்தான்.தன்  பெரும்பாலான நேரத்தைக் காட்டில் விலங்குகளை வேட்டையாடுவதில் செலவு செய்தான்.

ரு நாள், சந்தனு வேட்டைக்காகக் காட்டில் திரிந்து கொண்டிருந்தபோது, கங்கைக் கரையில் ஒரு அழகான பெண்ணைக் கண்டான். அவள் தோற்றத்தில் உடனே  மயங்கிய சந்தனு அவளை நெருங்கி அவள் யார் என்று கேட்டான்.

அந்தப் பெண் தான் யார் என்பதை வெளிப்படுத்த மறுத்து விட்டாள், ஆனால் சந்தனுவைத்  திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக் கொண்டாள். ஆயினும், தனது எந்தச் செயலையும், அது  ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், அதைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்ற தன் நிபந்தனையையும் அவள் தெரிவித்தாள்.

சந்தனு அவளது நிபந்தனையை ஏற்றுக் கொண்டான். அவள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே அவளை மணந்து கொண்டான். திருமணத்துக்குப் பிறகு, கங்கை மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டாள், இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தனர்.

சிறிது காலம் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே, கங்கை குழந்தையை எடுத்துச் சென்று அதை கங்கையாற்றில் மூழ்கடித்தாள்.

இந்தக் கொடூரச் செயலால் சந்தனு அதிர்ச்சியடைந்தான். ஆயினும், திருமணத்துக்கு முன் கங்கை விதித்த நிபந்தனையையும், அதைத் தான் ஏற்றுக் கொண்டதையும் கருத்தில் கொண்டு, அவளைக் கேள்வி கேட்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சந்தனு.

அவர்களுக்குப் பிறந்த இரண்டவது குழந்தையையும் கங்கை இவ்வாறே நீரில் மூழ்கடித்தாள். அடுத்துப் பிறந்த ஐந்து குழந்தைகளையும் கூட இதே போன்று நீரில் மூழ்கடித்தாள்.

எட்டாவது குழந்தையை கங்கை தண்ணீரில் மூழ்கடிக்கக முயன்றபோது, ​​​​சந்தனு அவளைத் தடுத்து, அவள் ஏன் இத்தகைய கொடூரமான செயலைச் செய்கிறாள் என்று கேட்டான்.

சந்தனு அவ்வாறு கேட்டதும், "இந்த எட்டாவது குழந்தையை மூழ்கடிக்க மாட்டேன்"  என்று கூறிய கங்கை, தான் விதித்த நிபந்தனையை மீறி சந்தனு தன செயல் குறித்துக் கேள்வி எழுப்பியதால் தான் அவனை விட்டுப் பிரிய வேண்டும் என்றும் தெரிவித்தாள்.

தான் யார் என்பதை அப்போது சந்தனுவுக்கு வெளிப்படுத்திய கங்கை, அஷ்ட வசுக்கள் பெற்ற சாபம், அஷ்ட வசுக்களின் தாயாக இருக்கத் தான் சம்மதித்தது ஆகிய விவரங்களை சந்தனுவிடம் விவரித்தாள்.

அஷ்ட வசுக்கள் உலகில் மனிதர்களாகப் பிறப்பதற்குக் காரணமான சாபம் பற்றி சந்தனு அறிந்து கொள்ள விரும்பினான். பிறகு கங்கை அஷ்ட வசுக்களின் கதையை சந்தனுவிடம் விரிவாகக் கூறினாள்.

10. ஆதிபர்வம் - 8. அஷ்ட வசுக்கள்

8. ஆதிபர்வம் - 6. மகாபிஷன்

Saturday, March 11, 2023

8. ஆதி பர்வம் - 6. மஹாபிஷன்

இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த மன்னன் மஹாபிஷன். பல நாடுகளை வென்றும், எல்லா யாகங்களிலும் மிகப் பெரியதாகக் கருதப்படும் ராஜசூயம் உட்பட பல யாகங்களைச் செய்தும்  பெருமையடைந்தான். ஆனால், அவன் தன் காம இச்சையால் வீழ்ச்சி அடைந்தான்

ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மாவை வழிபடுவதற்காக எல்லா வானவர்களும்  அவையில் கூடியிருந்தனர். மன்னன் மகாபிஷனும் அவையில் இருந்தான். பல ராஜரிஷிகள் அந்த அவையில் இருந்தனர். புனித நதியான கங்கையும் அங்கே வந்திருந்தாள்.

பிரம்மா அவர்கள் முன் தோன்றி அவரர்களுக்கு வாழ்த்துக் கூறினார். 

அப்போது  திடீரென்று காற்று வீசியதால் ஒரு கணம் கங்கையின் ஆடை பறந்து சற்றே மேலே எழும்பியது. ஆடை கலைந்ததால் அதனால் வெளிப்பட்ட கங்கையின் உடற்பகுதியைப் பார்ப்பதைத் தவிர்க்க வானவர்கள் அனைவரும் தங்கள் தலைகளைக் குனிந்து கொண்டனர். ஆனால் மஹாபிஷன் தன் சபலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கங்கையை வெறித்துப் பார்த்தான்..

மகாபிஷனின் நடத்தையால் கோபமடைந்த பிரம்மா அவன் பூமியில் பிறக்க வேண்டுமென்று சாபமிட்டார். கங்கையும் பூமியில் பிறந்து அவன் மனதைப் புண்படுத்த வேண்டும் என்றும் விதித்தார். மஹாபிஷன் ஆத்திரமடைந்து தன் கோபத்தைக் காட்டியதும், அவன் சாபத்திலிந்து விடுபடுவான் என்றார் பிரம்மா.

மன்னன் மகாபிஷன், தான் பெரும் பராக்கிரமசாலியான பிரதீபா மன்னனின் மகனாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டினான்..

மஹாபிஷன் தன்னைக் காமத்துடன் பார்த்ததால் அவன் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதை கங்கை உணர்ந்தாள்.

தேவர்களின் அவையிலிருந்து வீடு திரும்பும் போது, ​​கங்கை வானவர் குழாமைச் சேர்ந்த அஷ்ட வசுக்கள் என்ற எட்டு சகோதரர்களைச் சந்தித்தாள். அவர்கள் துயரில் ஆழ்ந்திருந்ததை கவனித்த கங்கை அவர்களின் துயருக்கான காரணத்தை அவர்ளிடம் கேட்டாள்.

தாங்கள் ஒரு அதிகாலை நேரத்தில் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​வசிஷ்ட முனிவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்ததை கவனிக்காமல் அவர் மீது இடறி விழுந்து விட்டதாகவும், கோபமடைந்த வசிஷ்டர் தங்களை மனிதர்களாகப் பிறக்கும்படி சபித்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

பிரம்மாவின் ஆணையின்படி கங்கையும் மனிதப் பிறவி எடுக்க வேண்டும் என்பதை அவளிடமிருந்து அறிந்து கொண்ட வசுக்கள் மனிதப் பிறவியில் அவள் தங்களுக்குத் தாயாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

'உங்கள் தந்தையாக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று?" என்று கங்கை வசுக்களிடம் கேட்டபோது,  ​​​​அவர்கள் பிரதீப மன்னனின் மகனான சந்தனுவாகப் பிறக்கப் போகும் மகாபிஷனின் பெயரைக் குறிப்பிட்டனர்.

"நாங்கள் பிறந்தவுடனேயே எங்களை கங்கையாற்றில் எறிந்து விடுங்கள், அப்படிச் செய்தால் நாங்கள் சாபத்திலிருந்து விடுபட்டு விடுவோம்!" என்று வசுக்கள் கங்கையிடம் கூறினர்.

சந்தனுவுக்கு ஒரு மகனையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று கங்கை கேட்டுக் கொண்டபோது, வசுக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். உயிருடன் இருக்கப் போகிறவனுக்கு மற்ற ஏழு சகோதரர்களும் தங்கள் ஆற்றலில் எட்டில் ஒரு பங்கை அளிக்கப் போவதாகவும், ஆனால் அவனுக்குக் குழந்தை பிறக்காது என்றும் அவர்கள் கூறினர்.

9. ஆதிபர்வம் - 7. சந்தனு

7. ஆதிபர்வம் - 5. யயாதி

7. ஆதிபர்வம் - 5. யயாதி

பிரசேதஸுக்கு 11-ஆவது மகன் தட்சன். அவரிடமிருந்துதான் அனைத்து உயிரினங்களும் தோன்றின. எனவே அவர் பிரஜாபதி (மக்களுக்கு அதிபதி அல்லது தலைவர்) என்று அழைக்கப்படுகிறார்.

தட்சன் ஆயிரம் மகன்களையும், ஐம்பது மகள்களையும் பெற்றெடுத்தார். பிரம்மாவின் மகனான நாரதரால் தட்சனின் மகன்களுக்கு சாங்கிய தத்துவம் முக்திக்கு வழி காட்டும் ஒரு மதக் கோட்பாடு) கற்பிக்கப்பட்டது.

தட்சனின் 50 மகள்களில், 10 பேர் தர்மர் என்பவருக்கும், 13 பேர் மரிச்சியின் புதல்வர் காஷ்யப முனிவருக்கும், 27 பேர் சந்திரனுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். சந்திரனின் இந்த 27 மனைவிகள் விண்மீன் கூட்டத்தின் 27 நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

காஷ்யபரின் மூத்த மனைவியான அதிதி, தேவர்கள் (வானவர்கள்) என்றும் அழைக்கப்படும் ஆதித்தியர்களைப் பெற்றெடுத்தார். மூத்த மகன் இந்திரன். விவஸ்வத் (சூரியன்) மற்ற மகன்களில் ஒருவர். விவஸ்வத் யமன் (இவர் மரணத்தின் கடவுளானார்) மற்றும் மனுவைப் பெற்றெடுத்தார்.

மனு புத்திசாலித்தனமும் ஞானமும் பெற்றவர். அவரிடமிருந்து மனித இனம் தோன்றியது. எனவே மனிதர்கள் மானவர்கள் (மற்றும் மனுஷ்யர்கள்/ மனிதர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். மனுவின் வம்சத்தில் இலா பிறந்தான், அவனுக்குப் புருவரஸ் பிறந்தான்.

புருவரஸுக்கு ஆறு மகன்கள் இருந்தனர், அவர்களில் மூத்தவன் ஆயுஸ். ஆயுஸுக்கு நான்கு மகன்கள் இருந்தனர், அவர்களினல் மூத்தவன் நகுஷன்.

நகுஷன் பெரும் பராக்கிரமம் கொண்டவன். அவன் பல அரசர்களை வென்றான். கடுமையான தவத்தின் மூலம் விண்ணுலகின் அரசனான இந்திரன் ஆகத் தகுதி பெற்றான்.

இந்திரனாகப் பதவி ஏற்க இந்தரலோகத்துக்கு ஒரு பல்லக்கில் கிளம்பிய நகுஷன், வசிஷ்டர், பரத்வாஜர், ஜமதக்னி, கௌதமர், அத்ரி, விஸ்வாமித்திரர், அகஸ்தியர் ஆகிய ஏழு பெரிய முனிவர்களையும் (சப்தரிஷிகள்) தன் பல்லக்கைச் சுமக்கச் செய்தான். அவர்கள் பல்லக்கைச் சுமந்து செல்லும்போதே அவர்களை வேகமாகச் செல்லும்படி கட்டளையிட்டான்.

நகுஷனின் ஆணவத்தால் கோபமடைந்த அகஸ்தியர் அவன் ஒரு பாம்பாக மாற வேண்டும் என்று சபித்தார். (சம்ஸ்கிருதத்தில் 'சர்ப்ப' என்றால் 'சீக்கிரம்' என்று பொருள், பாம்பு என்றும் பொருள். நகுஷன் முனிவர்களைப் பார்த்து 'சர்ப்ப, சர்ப்ப'  (சீக்கிரம், சீக்கிரம்) என்று சர்ப்பம் (பாம்பு) போல் சீறியதால், அகஸ்தியர் 'நீ சர்ப்பமாக ஆகக் கடவாய்!' என்று சாபமிட்டார்.)

நகுஷன் உடனே ஒரு பாம்பாக மாறி பல்லக்கிலிருந்து கீழே விழுந்ததுடன், தான் தவத்தினால் அடைந்த உயர்ந்த நிலையிலிருந்தும் கீழே விழுந்தான்.

நகுஷனுக்கு ஆறு மகன்கள். அவனுடைய மூத்த மகன் யதி துறவறம் பூண்டதால், அவனுடைய இரண்டாவது மகன் யயாதி அரசரானான். யயாதி தனது வீரத்தால் உலகம் முழுவதையும் வென்றான்..

யயாதிக்கு தேவயானி, சர்மிஷ்டை என்ற இரு மனைவிகள் இருந்தனர். அவனுக்கு தேவயானி மூலம் யது, துர்வசு என்ற இரு மகன்களும், சர்மிஷ்டை மூலம் த்ராஹ்யு, அனு, புரு ஆகிய மூன்று மகன்களும் பிறந்தனர்.

தேவயானியின் தந்தை சுக்கிராச்சாரியரின் சொல்லை மீறி, தேவயானியின் அடிமையாக இருந்த சர்மிஷ்டையை யயாதி மணந்ததால், யயாதி தன் இளமையை இழந்து, முதுமையின் தளர்ச்சியால் வாட வேண்டும் என்று சுக்கிராச்சாரியர் சாபம் இட்டார்.

தன்னை மன்னித்து சாபத்திலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று யயாதி சுக்கிராச்சாரியரிடம் கோரினான். சுக்கிராச்சாரியர் சற்று மனம் இரங்கி, யயாதி தன் முதுமையைத் தன் மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனுடைய இளமையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தன் சாபத்தை மாற்றினார்.

யயாதிக்குத் தன்  இளமையைக் கொடுத்து முதுமையை வாங்கிக் கொள்ளும் மகன் யயாதிக்குப் பின் அரியணை ஏறுவான் என்றும், அவன் நல்லொழுக்கம் கொண்டு புகழ் பெற்று விளங்குவான் என்றும் சுக்கிராச்சாரியர் அருளினார்.

சுக்கிராச்சாரியரின் சாபத்தின் விளைவாக, யயாதி முதுமை அடைந்தான், ஆனால் உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில் அவனுக்கு இன்னமும் தீவிர ஆசை இருந்தது.

யயாதி தனது ஐந்து மகன்களையும் அழைத்து அவர்களிடம் கூறினான்:

“நான் இளமையாக இருக்க விரும்புகிறேன், இன்னும் சிறிது காலம் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க விரும்புகிறேன். உங்களில் யாராவது என் முதுமையைப் பெற்றுக் கொண்டு சிறிது காலம் உங்கள் இளமையைத் தருவீர்களா? வயதான என் உடலைப் பெற்றுக் கொள்பவன் அரசனாகலாம்!” 

யயாதியின் ஐந்து மகன்களில் நான்கு பேர் அவனுடைய கோரிக்கையை  நிராகரித்து விட்டனர். அவனுடைய கடைசி மகன் புரு தனது இளமையான உடலைத் தன் தந்தையின் வயதான உடலுடன் மாற்றிக் கொண்டான்.

யயாதி பல வருடங்கள் உலக இன்பங்களை அனுபவித்தான், ஆனால் இன்பத்தின் மீதான ஆசை இன்பத்தை அனுபவிப்பதால் தணியாது, தீவிரம்தான் அடையும் என்பதை இறுதியில் உணர்ந்தான்.

புருவிடமிருந்த தான் பெற்ற இளமையான உடலைத் தனது மகனிடம் திருப்பி அளித்து அவனிடமிருந்து முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட யயாதி, புருவிடம், "நீதான் என் உண்மையான மகன், என் வம்சம் உன் பெயரால் அறியப்படும்!" என்று கூறி வாழ்த்தினான்.

யயாதியின் மற்ற மகன்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் தன் விருப்பத்தை நிறைவேற்ற புரு மட்டுமே முன்வந்ததைச் சுட்டிக் காட்டி யயாதி தன் முடிவை நியாயப்படுத்தினான்.

பின்னர் யயாதி தவம் செய்ய பிருகு மலைக்குச் சென்றான் இறுதியில் தன் பூத உடலை விட்டுத் தன் இரண்டு மனைவிகளுடன் சொர்க்கத்திற்குச் சென்றான்.

யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் என்றும், துர்வசுவின் வம்சாவளியினர் யவனர்கள் என்றும், திராஹ்யுவின் சந்ததியினர் போஜர்கள் என்றும், அனுவின் சந்ததிகள் மிலேச்சர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

புருவின் சந்ததியினர் பௌரவர்கள் ஆனார்கள். கௌரவர்களும் பாண்டவர்களும் பௌரவர்கள்தான். புருவின் வழித்தோன்றல்களில் ஒருவர் குரு.

குரு நல்லொழுக்கம் நிறைந்த, புகழ்பெற்ற அரசனாக இருந்ததால், புரு வம்சம் குருவின் பெயரால் குரு வம்சம் என்று அழைக்கப்பட்டது. குரு வம்சத்தில் வந்த இளவரசர்கள் மற்றும் மன்னர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்..

திருதராஷ்டிரனின் மகன்கள் மற்றும் பாண்டுவின் மகன்கள் என்ற இரு சாராருமே கௌரவர்கள்தான். இருப்பினும், பாண்டுவின் மகன்கள் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டதால், கௌரவர்கள் என்ற சொல் பொதுவாக திருதராஷ்டிரனின் மகன்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

8. ஆதிபர்வம் - 6. மஹாபிஷன்

6. ஆதிபர்வம் - 4. பரதன்



Friday, March 10, 2023

5. ஆதிபர்வம் - 3. சகுந்தலை

சகுந்தலையின் கதையைக் கேட்ட துஷ்யந்தன், "நன்றாகப் பேசினாய்.  அழகான பெண்ணே, நீ எனக்கு மனைவியாக இருப்பாயா? தங்க ஆபரணங்கள்,  பல்வேறு நாடுகளின் அரிய முத்துக்கள், சிறந்த கம்பளங்கள் மற்றும் பலவற்றை உனக்கு அளிப்பேன். என் ராஜ்யம் முழுவதும் உன்னுடையதாக இருக்கும்! நாம் காந்தர்வ* முறையில் திருமணம் செய்து கொள்ளலாம்” என்றான்.

“என் தந்தை வரும்வரை காத்திருப்போம். அவர் என்னை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பார்” என்றாள் சகுந்தலை. 

ஓ அழகான பெண்ணே! குற்றமற்றவளே! நீ உன்னை எனக்கு அளிக்கலாம். இதை வேதம் அனுமதிக்கிறது. பிரம்ம, தைவ, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, காந்தர்வ, ராட்சஸ, பைசாஸ என்று எட்டு வகைத் திருமண முறைகள்  உள்ளன.  இந்த எட்டு வகைத் திருமண  முறைகளில் எந்த ஒன்றும் சூழ்நிலைகளைப் பொருத்து சரியானதாக இருக்கும் என்று மனுதர்மம் கூறுகிறது, இருப்பினும், குறிப்பிட்ட சாதியினருக்கு குறிப்பிட்ட வகைத் திருமணங்கள் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன அரசர்களுக்கு காந்தர்வ மற்றும் ராட்சஸ முறைகள் அனுமதிக்கப்படுகின்றன. உனக்கு எந்த அச்சமும் தேவையில்லை. நாம் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொள்வோம்” என்றான் துஷ்யந்தன். 

“வழக்கில் உள்ள முறைகளால் அனுமதிக்கப்பட்டால், உங்கள் யோசனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களிடமிருந்து எனக்கு ஒரு வாக்குறுதி தேவை. என் மகன் உங்கள் வாரிசாக இருக்க வேண்டும்” என்றாள் சகுந்தலை.

சகுந்தலையைத் தன்னுடையவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறித்தனமான ஆசையால் உந்தப்பட்ட மன்னன், சற்றும் யோசிக்காமல், சகுந்தலையின் நிபந்தனைக்கு உடனே ஒப்புக் கொண்டான்.

இருவரும் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தனது படைகளின் நான்கு பிரிவுகளையும் அனுப்பி, சகுந்தலையை எல்லாவித மரியாதைகளுடனும் தன் நாட்டின் தலைநகருக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்து துஷ்யந்தன் அவளிடமிருந்து விடைபெற்றான்.

துஷ்யந்தன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு கண்வ முனிவர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். வெட்க மிகுதியால் சகுந்தலை நடந்ததை முனிவரிடம் சொல்லத் துணியவில்லை.

இருப்பினும், அபரிமிதமான ஆன்மீக சக்திகளைக் கொண்ட கண்வர் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.

அவர் சகுந்தலையைப் பார்த்து, “கவலைப்படாதே, மகளே! நீ எந்தத் தவறும் செய்யவில்லை. காந்தர்வ முறைத் திருமணம் அரசர்களுக்கு ஏற்றதுதான். துஷ்யந்தன் ஒழுக்கமானவன். உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெரும் பராக்கிரமமும், வீரமும் உள்ளவனாக இருப்பான், அவன் உலகையே ஆள்வான்“ என்றார்.

தன் வளர்ப்புத் தந்தையின் அன்பான வார்த்தைகளால் நெகிழ்ந்த சகுந்தலை அவரது கால்களைக் கழுவி துஷ்யந்தனுக்கு அவருடைய ஆசிகளை  வழங்குமாறு வேண்டினாள்.

"புரு இனத்தின் அனைத்து அரசர்களும் நல்லொழுக்கம் மிகுந்தவர்கள். அவர்கள் தங்கள் அரியணையை ஒருபோதும் இழக்க மாட்டார்கள்" என்று கண்வர் ஆசி வழங்கினார்.

குந்தலைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை சிறந்த வீரம் மற்றும் நற்பண்புகள் கொண்ட மனிதனாக வளரும் என்பதைக் குறிக்கும் மங்களகரமான அடையாளங்கள் குழந்தையின் உள்ளங்கையில் இருந்தன.

சகுந்தலையின் மகன் தன் ஆறாவது வயதிலேயே சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளைப் பிடித்து மரங்களில் கட்டி வைப்பான். இந்தச் சாதனையை நிகழ்த்தியதால் அவனுக்கு சர்வதாமன் (அனைத்தையும்/ அனைவரையும் அடக்கக் கூடியவன்) என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது.

சிறிது காலம் சென்றதும், சிறுவனை துஷ்யந்தனிடம் அழைத்துச் சென்று அவனை மன்னனின் வாரிசு என்று வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கண்வர் முடிவு செய்தார்.

சகுந்தலையையும் அவள் மகனையும் புரு ராஜ்யத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்லும்படி தன் சீடர்கள் சிலரைக் கேட்டுக் கொண்டார் கண்வர்.

சகுந்தலையையும், அவள் புதல்வனையும் கண்வரின் சீடர்கள்  துஷ்யந்தனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தாயையும் மகனையும் அரசவையில் விட்டு விட்டுச் சீடர்கள் தங்கள் ஆசிரமத்துக்குத் திரும்பினர்.

துஷ்யந்தனின் அரசவைக்குச் சென்ற சகுந்தலை அரசனிடம், “அரசே! இதோ உங்கள் மகன்! நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியின்படி அவனை உங்கள் வாரிசாக ஆக்குங்கள்” என்றாள்.

"யார் நீ? உன்னைப் பார்த்ததாகவே எனக்கு நினைவில்லை. தயவுசெய்து இங்கிருந்து போய்விடு" என்றான் துஷ்யந்தன்.

மன்னனின் வார்த்தைகளால் அதிர்ந்து போன சகுந்தலை கோபமடைந்து கண்கள் சிவந்தாள். ஆயினும்,கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் கூறினாள்:

"அரசே! உங்களுக்கு உண்மை தெரிந்திருந்தும், நீங்கள் அற்பமான மனிதரைப் போல் நடந்து கொள்கிறீர்கள். தன்னிடமே நேர்மையில்லாமல் நடந்து கொள்பவன் தன்னைத்தானே கொள்ளையடித்துக் கொள்கிறான்.

“என்ன நடந்தது என்பது வேறு யாருக்கும் தெரியாது என்ற தவறான நம்பிக்கையில் இருக்க வேண்டாம். உங்களுக்குள் வீற்றிருக்கும் நாராயணன் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். அவர் முன்னிலையில்தான் நீங்கள் பாவம் செய்தீர்கள். உங்கள் பாவங்கள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார்.

"ஒரு மனிதனின் செயல்களுக்கு சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, பூமி, வானம், நீர், இதயம், யமன், பகல், இரவு, இரவும் பகலும் சந்திக்கும் இரண்டு அந்தி வேளைகள் மற்றும் தர்மம் ஆகியவை சாட்சியாக இருக்கின்றன. பொய் சொல்லித் தன்னைத் தாழ்த்திக் கொள்பவனுக்கு தெய்வங்கள் அருள மாட்டா. அவனுடைய ஆன்மா கூட அவனை மன்னிக்காது.

“நீங்கள் வாக்களித்தபடி நீங்கள் என்னை இங்கு அழைத்து வராமல் நானே உங்களிடம் வந்திருப்பதால், என்னை இளப்பமாக நடத்த வேண்டாம். நான் உங்கள் மனைவி, நான் முறையாக நடத்தப்பட வேண்டியவள்.

“ஒரு பெண்ணின் வயிற்றில் நுழையும் கணவன் மகனாக வெளிப்படுகிறான். அப்படிப் பிறந்த மகன் தன் முன்னோர்களை ‘புத்’ என்ற நரகத்திலிருந்து மீட்கிறான். அதனால்தான் அவன் புத்திரன் என்று அழைக்கப்படுகிறான்.

“ஒரு மகனைப் பெற்றவன் மூன்று உலகங்களையும் வெல்வான். பேரனைப் பெற்றவன் நித்தியத்தை (அழியாத தன்மையை) அடைகிறான். தன் பேரனின் மகன் மூலம், அவன் என்றும் நிலைத்த மகிழ்ச்சியைப் பெறுகிறான். 

“ஒரு மகனைப் பெற்ற பெண் உண்மையான மனைவியாகக் கருதப்படுகிறாள். அவள் கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் உண்மையான மனைவி. அவள் ஆணின் ஒரு பாதி. மனைவி ஒரு மனிதனின் முதல் தோழி. மனைவி இருப்பவரால் மட்டுமே சமயச் சடங்குகளைச் செய்ய முடியும். எனவே மனைவி ஒரு மனிதனின் மதிப்பு மிக்க சொத்து.

“கணவன் இறப்பதற்கு முன் இறந்து விடும் மனைவி யமனின் உலகத்தில் அவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள். ஒரு கணவன் தன் மனைவியின் சகவாசத்தை இவ்வுலகிலும், மறு உலகிலும் அனுபவிக்கிறான்.

“ஒரு மனிதன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்று கற்றறிந்தவர்களால் கூறப்படுகிறது. எனவே, ஒரு ஆண் தன் மகனைப் பெற்ற தன் மனைவியைத் தன் தாயாகப் பார்க்க வேண்டும். ஒருவன் தன் மகனின் முகத்தைப் பார்த்தால், அவனுக்குக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

“ஒருவன் தன் மகனின் முகத்தைப் பார்த்து அடையும் இன்பம், ஒருவன் சொர்க்கத்தை அடையும்போது பெறும் இன்பத்தைப் போன்றது. ஒரு மனிதனின் உடல் மற்றும் மன உளைச்சல்கள் அனைத்தும் அவன் தன் மகனின் முகத்தைப் பார்த்தால் மறைந்து விடும்.

"உங்களிடம் வந்து மண்டியிடத் துடிக்கும் உங்கள் மகனை ஏன் அலட்சியமாக நடத்துகிறீர்கள்? எறும்புகள் கூடத் தங்கள் முட்டைகளை ஆதரிக்கின்றன, நல்லொழுக்கமுள்ள நீங்கள் ஏன் உங்கள் மகனை ஆதரிக்க மறுக்கிறீர்கள்? மென்மையான சந்தனக் கூழ், குளிர்ந்த நீர், ஒரு பெண்ணின் தொடுதல் இவை கூட, ஒரு மகனின் தொடுதலைப் போன்ற மகிழ்ச்சியை அளிக்காது!

“உங்கள் மகன் இவ்வுலகில் பிறந்தபோது, ‘அவன் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வான்’ என்று வானத்திலிருந்து ஒரு தெய்வீகக் குரல் கேட்டது.

“என் வாழ்க்கை உங்களைச் சார்ந்துள்ளது, என் இனத்தின் தொடர்ச்சியும் உங்களைத்தான் சார்ந்துள்ளது. ஆறு விண்ணுலக நங்கைகளில் முதன்மையானவளும் (ஊர்வசி, பூர்வசிதி, சகஜன்யா, விஸ்வசி மற்றும் கிருதசி ஆகியோர் மற்ற ஐந்து பேர்), விண்ணிலிருந்து இறங்கி இந்த மண்ணுலகுக்கு வந்தவளுமான மேனகாவுக்கும், அவளால் கவரப்பட்ட விஸ்வாமித்திர முனிவருக்கும் பிறந்தவள் நான்.

“என் தாய் என்னைக் காட்டில் துக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டாள். நான் உங்களைச் சந்திப்பதற்கு முன்பு கண்வ முனிவரின் ஆசிரமத்தில் கன்னியாக இருந்தேன். நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, முதலில் என் பெற்றோரால் தூக்கி எறியப்பட்டேன், இப்போது உங்களால் தூக்கி எறியப்படுகிறேன்! நான் என் தந்தையின் இடத்திற்குத் திரும்பிச் சென்று விடுவேன். ஆனால், தயவு செய்து உங்கள் மகனைத் தள்ளி விடாதீர்கள்!”

சகுந்தலையின் பேச்சைக் கேட்ட துஷ்யந்தன் அவளுக்கு இவ்வாறு பதில் கூறினான்:

“பெண்கள் பொதுவாகப் பொய் சொல்பவர்கள். உன் பேச்சை யார் நம்புவார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, நீ காமவலை விரிக்கும் மேனகைக்கும் காம இச்சை கொண்ட விஸ்வாமித்திரனுக்கும் பிறந்தவள்!

“வழிபாடு முடிந்ததும், கடவுளுக்குப் படைக்கப்பட்ட பூக்களை ஒருவர் தூக்கி எறிவது போல, உன்னைப் பெற்றெடுத்த பிறகு, உன் தாய் உன்னைத் தூக்கி எறிந்தாள். நீ கேவலமான பெண்ணைப் போல் பேசுகிறாய். உன்னை எனக்குத் தெரியாது. நான் உன் மகனின் தந்தை அல்ல."

துஷ்யந்தன் பேச்சைக் கேட்டுக் கோபமடைந்த சகுந்தலை அவனுக்கு இவ்வாறு பதில் கூறினாள்:

“விண்ணுலக நங்கைகளில் என் அம்மா மேனகாதான் முதன்மையானவள். என் பிறப்பு உன்னுடையதை விட உயர்ந்தது. இந்திரன், யமன், குபேரன், வருணன் ஆகியோரின் இருப்பிடங்களுக்குச் செல்லும் சக்தி என்னிடம் உள்ளது. நான் மேரு மலை போல். நீ ஒரு கடுகு!

"அருவருப்பான தோற்றம் கொண்ட ஒரு நபர் நபர் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்கும்வரை மற்றவர்களை விடத் தான்  அழகாக இருப்பதாக எண்ணித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்.

“ஆனால் அழகாக இருக்கும் ஒரு நபர் மற்றவர்களைக் கேலி செய்ய மாட்டார். தூய்மையாக இருப்பவர் மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேச மாட்டார். ஆனால் தீயவன் நல்லவர்களை அவமதிப்பதில் மகிழ்ச்சி அடைவான்.

"தீயவர்கள் நேர்மையானவர்களைக் கெட்டவர்கள் என்று அழைப்பதை விடக் கேலிக்குரியது வேறொன்றுமில்லை! பன்றிகள் பூந்தோட்டத்தில் இருந்தாலும் அழுக்கு மற்றும் அசுத்தத்தையே எப்போதும் தேடும், ஆனால் அன்னப் பறவை நீர் கலந்த பாலிலிருந்து பாலை மட்டும் தனியாகப் பிரித்த பிறகு, அந்தப் பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

“ஒரு மகனைப் பெற்ற பிறகு, அவனைத் தன் மகனாகக் கருத மறுப்பவன், அவன் அடைய விரும்பும் உலகங்களை ஒருபோதும் அடைய மாட்டான். தெய்வங்கள் தன் உடைமைகளையும் செல்வத்தையும் அழிப்பதை அவன் காண்பான்.

"உங்கள் மகனை ஏற்றுக் கொண்டு சத்தியத்தை மதிக்குமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நூறு அஸ்வமேத யாகங்களை சத்தியத்திற்கு எதிராக எடைபோட்டபோது, சத்தியம்தான் அதிக எடை கொண்டிருந்தது!

“வேதம் கற்றல் மற்றும் புண்ணியத் தலங்களில் நீராடுதல் இவற்றுக்கு உள்ள  அதே மதிப்பு சத்தியத்திற்கு உள்ளது. சத்தியம்தான் கடவுள். உங்கள் உறுதிமொழியை மீறாதீர்கள்.  நீங்களும் உண்மையும்  இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,

“என் வார்த்தைகளை நீங்கள நம்பவில்லை என்றால், நான் இங்கிருந்து சென்று விடுகிறேன், ஆனால் நீங்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகு, நான்கு கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த உலகை என் மகன்தான் ஆட்சி செய்வான் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். "

இவ்வாறு கூறி விட்டு, சகுந்தலை அரண்மனையை விட்டு வெளியேறினாள்.

இதற்குப் பிறகு, துஷ்யந்தன், அரசவையில் தன் மந்திரிகள் மற்றும் குருமார்களுடன் இருந்தபோது, வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது,

“துஷ்யந்தா! சகுந்தலை கூறியது உண்மைதான். உன் மகனை ஏற்றுக் கொள், சகுந்தலையை அவமதிக்காதே. அந்தச் சிறுவன் உன்னால் போற்றப்பட வேண்டியவன் என்பதால், அவன் பரதன் (நேசத்துக்குரியவன்) என்ற பெயருடன் விளங்குவான். 

இந்த வார்த்தைகளைக் கேட்ட துஷ்யந்தன் தன் மந்திரிகளிடமும், குருமார்களிடமும், “வானத்திலிருந்து வந்த குரல் சொன்னவற்றைக் கேட்டீர்களா? அவன் என் மகன் என்று எனக்குத் தெரியும். ஆனால் சகுந்தலையின் வார்த்தைகளின் அடிப்படையில் மட்டுமே நான் அவனை ஏற்றுக் கொண்டிருந்தால், மக்களில் சிலருக்கு அவன் பிறப்பு பற்றிச் சில ஐயப்பாடுகள் இருந்திருக்கும், அவனைத் தூய்மையானவனாகக் கருதி இருக்க மாட்டார்கள்” என்றான்.

துஷ்யந்தன் அந்தச் சிறுவனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டு, ஒரு தந்தை செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தான். தன் மகனைக் கட்டிப் பிடித்து, ஒரு தந்தை தனது மகனின் ஸ்பரிசத்தால் பெறும் மகிழ்ச்சியை அனுபவித்தான். அந்தணர்கள் சிறுவனை ஆசீர்வதித்தனர், கவிஞர்கள் அவனைப் பாராட்டினர். 

துஷ்மந்தன் சகுந்தலையைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். 

அவன் அவளிடம், "தேவி! யாருக்கும் தெரியாமல் நம் இணைப்பு நடந்ததால், அதை அங்கீகரிக்க விரும்பினேன். உன் வார்த்தையின் அடிப்படையில் உன்னையும் என் மகனையும் நான் ஏற்றுக் கொண்டிருந்தால், மக்கள் நம் இணைப்பைக் காமத்தின் விளைவாக ஏற்பட்டதாகவும், நம் மகன் தூய்மையற்ற பிறப்பால் உருவானதாகவும் கருதியிருப்பார்கள். தயவு செய்து என்னை மன்னித்து, கோபத்தில் எனக்கு எதிராகப் பேசிய கடுமையான வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்!” என்றான்.

துஷ்யந்தன் தன் மகனுக்கு பரதன் என்று பெயரிட்டு, அவனைத் தன் வாரிசாக அறிவித்தான்.

துஷ்யந்தனுக்குப் பிறகு பரதன் அரசனானான். அவனுடைய தேர்களின் சக்கரங்கள் உலகம் முழுவதையும் சுற்றின. அவன் இந்த உலகின் எல்லா மன்னர்களையும் வென்று. பெரும் புகழ் பெற்றான். அவன் சக்ரவர்த்தி (பேரரசர்) மற்றும் சார்வபௌமன் (உலகம் முழுவதையும் ஆள்பவன்)  என்றும் அறியப்பட்டான்.

பரதன் பசு யாகம், குதிரை யாகம் உட்படப். பல யாகங்களைச் செய்தான். அந்த யாகங்களில் கண்வ முனிவர் தலைமைப் புரோகிதராக இருந்தார்.

பரதனிடமிருந்துதான் மாபெரும் பரத வம்சம் உருவானது. கடவுளுக்கு நிகரான பல மன்னர்கள் இந்த வம்சத்தில் பிறந்துள்ளனர்.

வைசம்பாயன முனிவர் பரத வம்சத்தில் இருந்த முக்கியமான மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

* காந்தர்வ முறைத் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரஸ்பர ஈர்ப்பின் அடிப்படையிலான திருமணமாகும், இதற்கு சடங்குகள், சாட்சிகள் தேவையில்லை, மணமகன் மற்றும் மணமகளின் குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கு பெற வேண்டியதில்லை.

6. ஆதிபர்வம் - 4. பரதன்

4. ஆதிபர்வம் 2 - தேவர்களும் அசுரர்களும்



Thursday, March 9, 2023

6. ஆதிபர்வம் - 4. பரதன்

சகுந்தலையின் கதையைக் கேட்ட துஷ்யந்தன், "நன்றாகப் பேசினாய்.  அழகான பெண்ணே, நீ எனக்கு மனைவியாக இருப்பாயா? தங்க ஆபரணங்கள்,  பல்வேறு நாடுகளின் அரிய முத்துக்கள், சிறந்த கம்பளங்கள் மற்றும் பலவற்றை உனக்கு அளிப்பேன். என் ராஜ்யம் முழுவதும் உன்னுடையதாக இருக்கும்! நாம் காந்தர்வ* முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றான்.

என் தந்தை வரும்வரை காத்திருப்போம். அவர் என்னை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பார் என்றாள் சகுந்தலை.

ஓ அழகான பெண்ணே! குற்றமற்றவளே! நீ உன்னை எனக்கு அளிக்கலாம். இதை வேதம் அனுமதிக்கிறது. பிரம்ம, தைவ, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, காந்தர்வ,  ராட்சஸ, பைசாஸ என்று எட்டு வகைத் திருமண  முறைகள்  உள்ளன.  இந்த எட்டு வகைத் திருமண  முறைகளில்  எந்த ஒன்றும் சூழ்நிலைகளைப் பொருத்து சரியானதாக  இருக்கும் என்று மனுதர்மம் கூறுகிறது, இருப்பினும், குறிப்பிட்ட சாதியினருக்கு குறிப்பிட்ட வகைத் திருமணங்கள் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன அரசர்களுக்கு காந்தர்வ மற்றும் ராட்சஸ முறைகள் அனுமதிக்கப்படுகின்றன. உனக்கு எந்த அச்சமும் தேவையில்லை. நாம் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றான் துஷ்யந்தன்.

வழக்கில் உள்ள முறைகளால் அனுமதிக்கப்பட்டால், உங்கள் யோசனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களிடமிருந்து எனக்கு ஒரு வாக்குறுதி தேவை. என் மகன் உங்கள் வாரிசாக இருக்க வேண்டும் என்றாள் சகுந்தலை.

சகுந்தலையைத் தன்னுடையவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறித்தனமான ஆசையால் உந்தப்பட்ட மன்னன், சற்றும் யோசிக்காமல், சகுந்தலையின் நிபந்தனைக்கு உடனே ஒப்புக் கொண்டான்.

இருவரும் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தனது படைகளின் நான்கு பிரிவுகளையும் அனுப்பி, சகுந்தலையை எல்லாவித  மரியாதைகளுடனும் தன் நாட்டின் தலைநகருக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்து துஷ்யந்தன் அவளிடமிருந்து விடைபெற்றான்.

துஷ்யந்தன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு கண்வ முனிவர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். வெட்க மிகுதியால் சகுந்தலை நடந்ததை முனிவரிடம் சொல்லத் துணியவில்லை.

இருப்பினும், அபரிமிதமான ஆன்மீக சக்திகளைக் கொண்ட கண்வர் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.

அவர் சகுந்தலையைப் பார்த்து, “கவலைப்படாதே, மகளே! நீ எந்தத் தவறும் செய்யவில்லை. காந்தர்வ முறைத் திருமணம் அரசர்களுக்கு ஏற்றதுதான். துஷ்யந்தன் ஒழுக்கமானவன். உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெரும் பராக்கிரமமும், வீரமும் உள்ளவனாக இருப்பான், அவன் உலகையே ஆள்வான் என்றார்.

தன் வளர்ப்புத் தந்தையின் அன்பான வார்த்தைகளால் நெகிழ்ந்த சகுந்தலை அவரது கால்களைக் கழுவி துஷ்யந்தனுக்கு அவருடைய ஆசிகளை  வழங்குமாறு வேண்டினாள்.

"புரு இனத்தின் அனைத்து அரசர்களும் நல்லொழுக்கம் மிகுந்தவர்கள். அவர்கள் தங்கள் அரியணையை ஒருபோதும் இழக்க மாட்டார்கள்" என்று கண்வர் ஆசி வழங்கினார்.

சகுந்தலைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை சிறந்த வீரம் மற்றும் நற்பண்புகள் கொண்ட மனிதனாக வளரும் என்பதைக் குறிக்கும் மங்களகரமான அடையாளங்கள் குழந்தையின் உள்ளங்கையில் இருந்தன.

சகுந்தலையின் மகன் தன் ஆறாவது வயதிலேயே சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளைப் பிடித்து மரங்களில் கட்டி வைப்பான். இந்தச் சாதனையை நிகழ்த்தியதால் அவனுக்கு சர்வதாமன் (அனைத்தையும்/ அனைவரையும் அடக்கக் கூடியவன்) என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது.

சிறிது காலம் சென்றதும், சிறுவனை துஷ்யந்தனிடம் அழைத்துச் சென்று அவனை மன்னனின் வாரிசு என்று வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கண்வர் முடிவு செய்தார்.

சகுந்தலையையும் அவள் மகனையும் புரு ராஜ்ஜியத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்லும்படி தன் சீடர்கள் சிலரைக் கேட்டுக் கொண்டார் கண்வர்.

சகுந்தலையையும், அவள் புதல்வனையும் கண்வரின் சீடர்கள்  துஷ்யந்தனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தாயையும் மகனையும் அரசவையில் விட்டு விட்டுச் சீடர்கள் தங்கள் ஆசிரமத்துக்குத் திரும்பினர்.

துஷ்யந்தனின் அரசவைக்குச் சென்ற சகுந்தலை அரசனிடம், “அரசே! இதோ உங்கள் மகன்! நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியின்படி அவனை உங்கள் வாரிசாக ஆக்குங்கள் என்றாள்.

"யார் நீ? உன்னைப் பார்த்ததாகவே எனக்கு நினைவில்லை. தயவுசெய்து இங்கிருந்து போய்விடு" என்றான் துஷ்யந்தன்.

மன்னனின் வார்த்தைகளால் அதிர்ந்து போன சகுந்தலை கோபமடைந்து கண்கள் சிவந்தாள். ஆயினும்,கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் கூறினாள்:

அரசே! உங்களுக்கு உண்மை தெரிந்திருந்தும், நீங்கள் அற்பமான மனிதரைப் போல் நடந்து கொள்கிறீர்கள். தன்னிடமே நேர்மையில்லாமல் நடந்து கொள்பவன் தன்னைத்தானே கொள்ளையடித்துக் கொள்கிறான்.

என்ன நடந்தது என்பது வேறு யாருக்கும் தெரியாது என்ற தவறான நம்பிக்கையில் இருக்க வேண்டாம். உங்களுக்குள் வீற்றிருக்கும் நாராயணன் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். அவர் முன்னிலையில்தான் நீங்கள் பாவம் செய்தீர்கள். உங்கள் பாவங்கள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார்.

"ஒரு மனிதனின் செயல்களுக்கு சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, பூமி, வானம், நீர், இதயம், யமன், பகல், இரவு, இரவும் பகலும் சந்திக்கும் இரண்டு அந்தி வேளைகள் மற்றும் தர்மம் ஆகியவை சாட்சியாக இருக்கின்றன. பொய் சொல்லித் தன்னைத் தாழ்த்திக் கொள்பவனுக்கு தெய்வங்கள் அருள மாட்டா. அவனுடைய ஆன்மா கூட அவனை மன்னிக்காது.

நீங்கள் வாக்களித்தபடி என்னை இங்கு அழைத்து வராமல் நானே உங்களிடம் வந்திருப்பதால், என்னை இளப்பமாக நடத்த வேண்டாம். நான் உங்கள் மனைவி, நான் முறையாக நடத்தப்பட வேண்டியவள்.

ஒரு பெண்ணின் வயிற்றில் நுழையும் கணவன் மகனாக வெளிப்படுகிறான். அப்படிப் பிறந்த மகன் தன் முன்னோர்களை ‘புத் என்ற நரகத்திலிருந்து மீட்கிறான். அதனால்தான் அவன் புத்திரன் என்று அழைக்கப்படுகிறான்.

ஒரு மகனைப் பெற்றவன் மூன்று உலகங்களையும் வெல்வான். பேரனைப் பெற்றவன் நித்தியத்தை (அழியாத தன்மையை) அடைகிறான். தன் பேரனின் மகன் மூலம், அவன் என்றும் நிலைத்த மகிழ்ச்சியைப் பெறுகிறான்.

ஒரு மகனைப் பெற்ற பெண் உண்மையான மனைவியாகக் கருதப்படுகிறாள். அவள் கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் உண்மையான மனைவி. அவள் ஆணின் ஒரு பாதி. மனைவி ஒரு மனிதனின் முதல் தோழி. மனைவி இருப்பவரால் மட்டுமே சமயச் சடங்குகளைச் செய்ய முடியும். எனவே மனைவி ஒரு மனிதனின் மதிப்பு மிக்க சொத்து.

கணவன் இறப்பதற்கு முன் இறந்து விடும் மனைவி யமனின் உலகத்தில் அவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள். ஒரு கணவன் தன் மனைவியின் சகவாசத்தை இவ்வுலகிலும், மறு உலகிலும் அனுபவிக்கிறான்.

ஒரு மனிதன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்று கற்றறிந்தவர்களால் கூறப்படுகிறது. எனவே, ஒரு ஆண் தன் மகனைப் பெற்ற தன் மனைவியைத் தன் தாயாகப் பார்க்க வேண்டும். ஒருவன் தன் மகனின் முகத்தைப் பார்த்தால், அவனுக்குக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ஒருவன் தன் மகனின் முகத்தைப் பார்த்து அடையும் இன்பம், ஒருவன் சொர்க்கத்தை அடையும் போது அடையும் இன்பத்தைப் போன்றது. ஒரு மனிதனின் உடல் மற்றும் மன உளைச்சல்கள் அனைத்தும் அவன் தன் மகனின் முகத்தைப் பார்த்தால் மறைந்துவிடும்.

உங்களிடம் வந்து மண்டியிடத் துடிக்கும் உங்கள் மகனை ஏன் அலட்சியமாக நடத்துகிறீர்கள்? எறும்புகள் கூடத் தங்கள் முட்டைகளை ஆதரிக்கின்றன, நல்லொழுக்கமுள்ள நீங்கள் ஏன் உங்கள் மகனை ஆதரிக்க மறுக்கிறீர்கள்? மென்மையான சந்தனக் கூழ், குளிர்ந்த நீர், ஒரு பெண்ணின் தொடுதல் இவை கூட, ஒரு மகனின் தொடுதலைப் போன்ற மகிழ்ச்சியை அளிக்காது!

உங்கள் மகன் இவ்வுலகில் பிறந்தபோது, ‘அவன் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வான் என்று வானத்திலிருந்து ஒரு தெய்வீகக் குரல் கேட்டது.

என் வாழ்க்கை உங்களைச் சார்ந்துள்ளது, என் இனத்தின் தொடர்ச்சியும் உங்களைத்தான் சார்ந்துள்ளது. ஆறு விண்ணுலக நங்கைகளில் முதன்மையானவளும் (ஊர்வசி, பூர்வசிதி, சகஜன்யா, விஸ்வசி மற்றும் கிருதசி ஆகியோர் மற்ற ஐந்து பேர்), விண்ணிலிருந்து இறங்கி இந்த மண்ணுலகுக்கு வந்தவளுமான மேனகாவுக்கும், அவளால் கவரப்பட்ட விஸ்வாமித்திர முனிவருக்கும் பிறந்தவள் நான்.

என் தாய் என்னைக் காட்டில் துக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டாள். நான் உங்களைச் சந்திப்பதற்கு முன்பு கண்வ முனிவரின் ஆசிரமத்தில் கன்னியாக இருந்தேன். நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, முதலில் என் பெற்றோரால் தூக்கி எறியப்பட்டேன், இப்போது உங்களால் தூக்கி எறியப்படுகிறேன்! நான் என் தந்தையின் இடத்திற்குத் திரும்பிச் சென்று விடுவேன். ஆனால், தயவு செய்து உங்கள் மகனைத் தள்ளி விடாதீர்கள்!”

சகுந்தலையின் பேச்சைக் கேட்ட துஷ்யந்தன் அவளுக்கு இவ்வாறு பதில் கூறினான்:

பெண்கள் பொதுவாகப் பொய் சொல்பவர்கள். உன் பேச்சை யார் நம்புவார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, நீ காமவலை விரிக்கும் மேனகைக்கும் காம இச்சை கொண்ட விஸ்வாமித்திரனுக்கும் பிறந்தவள்!

வழிபாடு முடிந்ததும், கடவுளுக்குப் படைக்கப்பட்ட பூக்களை ஒருவர் தூக்கி எறிவது போல, உன்னைப் பெற்றெடுத்த பிறகு, உன் தாய் உன்னைத் தூக்கி எறிந்தாள். நீ கேவலமான பெண்ணைப் போல் பேசுகிறாய். உன்னை எனக்குத் தெரியாது. நான் உன் மகனின் தந்தை அல்ல."

துஷ்யந்தன் பேச்சைக் கேட்டுக் கோபமடைந்த சகுந்தலை அவனுக்கு இவ்வாறு பதில் கூறினாள்:

விண்ணுலக நங்கைகளில் என் அம்மா மேனகாதான் முதன்மையானவள். என் பிறப்பு உன்னுடையதை விட உயர்ந்தது. இந்திரன், யமன், குபேரன், வருணன் ஆகியோரின் இருப்பிடங்களுக்குச் செல்லும் சக்தி என்னிடம் உள்ளது. நான் மேரு மலை போல். நீ ஒரு கடுகு!

அருவருப்பான தோற்றம் கொண்ட ஒரு நபர் நபர் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்கும்வரை மற்றவர்களை விடத் தான்  அழகாக இருப்பதாக எண்ணித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்.

ஆனால் அழகாக இருக்கும் ஒரு நபர் மற்றவர்களைக் கேலி செய்ய மாட்டார். தூய்மையாக இருப்பவர் மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேசமாட்டார். ஆனால் தீயவன் நல்லவர்களை அவமதிப்பதில் மகிழ்ச்சி அடைவான்.

"தீயவர்கள் நேர்மையானவர்களைக் கெட்டவர்கள் என்று அழைப்பதை விடக் கேலிக்குரியது வேறொன்றுமில்லை! பன்றிகள் பூந்தோட்டத்தில் இருந்தாலும் அழுக்கு மற்றும் அசுத்தத்தையே எப்போதும் தேடும், ஆனால் அன்னப்பறவை நீர் கலந்த பாலிலிருந்து பாலை மட்டும் தனியாகப் பிரித்த பிறகு, அந்தப் பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

ஒரு மகனைப் பெற்ற பிறகு, அவனைத் தன் மகனாகக் கருத மறுப்பவன், அவன் அடைய விரும்பும் உலகங்களை ஒருபோதும் அடைய மாட்டான். தெய்வங்கள் தன் உடைமைகளையும் செல்வத்தையும் அழிப்பதை அவன் காண்பான்.

"உங்கள் மகனை ஏற்றுக் கொண்டு சத்தியத்தை மதிக்குமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நூறு அஸ்வமேத யாகங்களை சத்தியத்திற்கு எதிராக எடைபோட்டபோது, சத்தியம்தான் அதிக எடை கொண்டிருந்தது!

வேதம் கற்றல் மற்றும் புண்ணியத் தலங்களில் நீராடுதல் இவற்றுக்கு உள்ள  அதே மதிப்பு சத்தியத்திற்கு உள்ளது. சத்தியம்தான் கடவுள். உங்கள் உறுதிமொழியை மீறாதீர்கள்.  நீங்களும் உண்மையும்  இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,

என் வார்த்தைகளை நீங்கள நம்பவில்லை என்றால், நான் இங்கிருந்து சென்று விடுகிறேன், ஆனால் நீங்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகு, நான்கு கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த உலகை என் மகன்தான் ஆட்சி செய்வான் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். "

இவ்வாறு கூறி விட்டு, சகுந்தலை அரண்மனையை விட்டு வெளியேறினாள்.

இதற்குப் பிறகு, துஷ்யந்தன், அரசவையில் தன் மந்திரிகள் மற்றும் குருமார்களுடன் இருந்தபோது, வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது,

துஷ்யந்தா! சகுந்தலை கூறியது உண்மைதான். உன் மகனை ஏற்றுக் கொள், சகுந்தலையை அவமதிக்காதே. அந்தச் சிறுவன் உன்னால் போற்றப்பட வேண்டியவன் என்பதால், அவன் பரதன் (நேசத்துக்குரியவன்) என்று பெயருடன் விளங்குவான்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட துஷ்யந்தன் தன் மந்திரிகளிடமும், குருமார்களிடமும், “வானத்திலிருந்து வந்த குரல் சொன்னவற்றைக் கேட்டீர்களா? அவன் என் மகன் என்று எனக்குத் தெரியும். ஆனால் சகுந்தலையின் வார்த்தைகளின் அடிப்படையில் மட்டுமே நான் அவனை ஏற்றுக் கொண்டிருந்தால், மக்களில் சிலருக்கு அவன் பிறப்பு பற்றிச் சில ஐயப்பாடுகள் இருந்திருக்கும், அவனைத் தூய்மையானவனாகக் கருதி இருக்க மாட்டார்கள் என்றான்.

துஷ்யந்தன் அந்தச் சிறுவனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டு, ஒரு தந்தை செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தான். தன் மகனைக் கட்டிப் பிடித்து, ஒரு தந்தை தனது மகனின் ஸ்பரிசத்தால் பெறும் மகிழ்ச்சியை அனுபவித்தான். அந்தணர்கள் சிறுவனை ஆசீர்வதித்தனர், கவிஞர்கள் அவனைப் பாராட்டினர்.

துஷ்மந்தன் சகுந்தலையைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். அவன் அவளிடம், "தேவி! யாருக்கும் தெரியாமல் நம் இணைப்பு நடந்ததால், அதை அங்கீகரிக்க விரும்பினேன். உன் வார்த்தையின் அடிப்படையில் உன்னையும் என் மகனையும் நான் ஏற்றுக் கொண்டிருந்தால், மக்கள் நம் இணைப்பைக் காமத்தின் விளைவாக ஏற்பட்டதாகவும், நம் மகன் தூய்மையற்ற பிறப்பால் உருவானதாகவும் கருதியிருப்பார்கள். தயவு செய்து என்னை மன்னித்து, கோபத்தில் எனக்கு எதிராகப் பேசிய கடுமையான வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்!” என்றான்.

துஷ்யந்தன் தன் மகனுக்கு பரதன் என்று பெயரிட்டு, அவனைத் தன் வாரிசாக அறிவித்தான்.

துஷ்யந்தனுக்குப் பிறகு பரதன் அரசனானான். அவனுடைய தேர்களின் சக்கரங்கள் உலகம் முழுவதையும் சுற்றின. அவன் இந்த உலகின் எல்லா மன்னர்களையும் வென்று. பெரும் புகழ் பெற்றான். அவன் சக்ரவர்த்தி (பேரரசர்) மற்றும் சார்வபௌமன் (உலகம் முழுவதையும் ஆள்பவன்)  என்றும் அறியப்பட்டான்.

பரதன் பசு யாகம், குதிரை யாகம் உட்படப். பல யாகங்களைச் செய்தான். அந்த யாகங்களில் கண்வ முனிவர் தலைமைப் புரோகிதராக இருந்தார்.

பரதனிடமிருந்துதான் மாபெரும் பரத வம்சம் உருவானது. கடவுளுக்கு நிகரான பல மன்னர்கள் இந்த வம்சத்தில் பிறந்துள்ளனர்.

வைசம்பாயன முனிவர் பரத வம்சத்தில் இருந்த முக்கியமான மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1 - காந்தர்வ பாணி திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரஸ்பர ஈர்ப்பின் அடிப்படையிலான திருமணமாகும், சடங்குகள், சாட்சிகள் தேவையில்லை, மணமகன் மற்றும் மணமகளின் குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கு பெற வேண்டியதில்லை. 

7. ஆதிபர்வம் - 5. யயாதி

Sunday, November 15, 2020

4. ஆதிபர்வம் - 2. தேவர்களும் அசுரர்களும்

காஸ்யப முனிவருக்குப் பல மனைவிகள் உண்டு.

அவர்களுள், அதிதியின் புதல்வர்கள் அற வழியில் நடப்பவர்கள். அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

திதியின் புதல்வர்கள் தீய இயல்பு கொண்டவர்கள். அவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர், (சுரர்கள் என்பது தேவர்களைக் குறிக்கும் சொல். அசுரர்கள் என்பது இதற்கு எதிர்மறையான சொல்.)

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே அடிக்கடி போர் மூண்டது. எல்லாப் போர்களிலுமே அசுரர்கள் தோற்றனர்.

திரும்பத் திரும்பத் தோல்வி அடைந்ததால் அசுரர்கள் விண்ணுலகில் இருந்த தங்கள் ராஜ்யத்தை இழந்தனர். அரசாளும் உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. 

தங்கள் சக்தியைப் பயன்படுத்தி அசுரர்கள் பூமியில் பிறவி எடுத்தனர். பிராணிகள், மனிதர்கள் என்று பல வடிவங்களில் அவர்கள் பிறந்தனர்.

அவர்கள் எல்லா வகை மனிதர்களையும் தொந்தரவு செய்து அவர்களுக்குத் துன்பம் விளைவிக்கத் தொடங்கினர். அவர்கள் முனிவர்களுக்கும் இடையூறுகள் செய்து அவர்களது தவத்துக்கும் சடங்குகளுக்கும் இடையூறுகள் செய்தனர்.

அசுரர்களின் கொடிய செயல்களால் ஏற்பட்ட சுமையைப் பொறுக்க முடியாத பூமாதேவி படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் சென்று தன் சுமையைக் குறைக்கும்படி வேண்டினார்.

தேவர்களை அவளுக்கு உதவச் சொல்வதாக பூமாதேவிக்கு வாக்களித்த பிரம்மா, தேவர்களை அழைத்து பூமியில் பிறவி எடுத்து அசுரர்களை அழிக்கும்படி அவர்களுக்குக் கட்டளை இட்டார்.

தேவர்கள் பிரம்மாவின் கட்டளையை ஏற்றுக் கொண்டனர். 

பிறகு அவர்கள் தேவர்களுக்கெல்லாம் தேவரும், தீமையை அழிப்பவருமான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்துக்குச் சென்று, அவரும் பூவுலகில் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளை விஷ்ணு ஏற்றுக் கொண்டார். 

பூவுலகில் தாங்கள் ஏற்க வேண்டிய பாத்திரங்களைப் பற்றி அவர்கள் விஷ்ணுவிடம் விவாதித்தனர்.

(பிரம்மாவின் கட்டளைப்படி பூவுலகில் பிறந்த எல்லா தேவர்களின் பெயர்களையும் வைசம்பாயனர் கூறுகிறார். (அது மிக நீண்ட பட்டியல் என்பதாலும், மகாபாரதக் கதையை அறிந்து கொள்ள இந்தப் பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லை என்பதாலும், இந்தப் பதிவில் அது கொடுக்கப்படவில்லை.)

தேவர்கள் முனிவர்களின் வம்சத்தில் பிறந்தனர். இறுதியில் அவர்கள் அசுரர்களை முழுவதுமாக அழித்து, பூமியை வாழ்வதற்குப் பாதுகாப்பான இடமாகச் செய்தனர்.

5. ஆதிபர்வம் - 3. சகுந்தலை

3. ஆதிபர்வம் - 1. வைஸம்பாயனர் மகாபாரதக் கதையைக் கூறுகிறார்



Saturday, November 7, 2020

3. ஆதி பர்வம் - 1. வைஸம்பாயனர் மகாபாரதக் கதையைக் கூறுகிறார்

அபிமன்யுவின் புதல்வனும் அர்ஜுனனின் பேரனுமான பரீட்சித் ஒரு முறை காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு மானின் மீது அம்பைச் செலுத்தினான். காயம் பட்ட மான் ஓடி விட்டது,

மானைத் தேடி பரீட்சித் ஓடினான். நீண்ட தூரம் அலைந்தும் அவனால் மானைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

களைப்படைந்த நிலையில் அவன் சமிக முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். சமிக முனிவர் மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து கொண்டு, பசுக்களிடம் பால் குடித்த கன்றுகளின் வாயிலிருந்து வந்த நுரையை அருந்திக் கொண்டிருந்தார்.

பரீட்சித், முனிவரிடம், “நான் அரசன் பரீட்சித் . அபிமன்யுவின் புதல்வன். நான் வேட்டையாடிய மான் ஒன்று ஓடி விட்டது. நீங்கள் அதைப் பார்த்தீர்களா?” என்றான்.

முனிவர் மௌன விரதம் அனுசரித்து வந்ததால், அவர் பதில் சொல்லவில்லை. 

முனிவர் பதில் சொல்லாததால் கோபமடைந்த பரீட்சித் ஒரு இறந்த பாம்பைத் தன் வில்லின் நுனியால் எடுத்து முனிவரின் தோளின் மீது போட்டான். அப்போதும் முனிவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.

தன் செயலினால் கோபமடையாமல் முனிவர் பொறுமையாக இருந்ததைக் கண்ட பரீட்சித் தான் செய்ததை நினைத்து வருந்தி அமைதியாக அரண்மனைக்குத் திரும்பினான். 

சமிக முனிவரின் மகன் ஸ்ருங்கின் அப்போது வெளியே சென்றிருந்தான். அவன் கடும் விரதங்கள் புரிந்து சக்தியுடன் விளங்கியவன். கோபக்காரன். எளிதில் சமாதானப்படுத்தப் பட முடியாதவன். 

அரசனான பரீட்சித் ஸ்ருங்கினின் தந்தையின் தோள் மீது ஒரு செத்த பாம்பைப் போட்டு அவரை அவமதித்து விட்டதாக ஸ்ருங்கினிடம் அவன் நண்பன் ஒருவன் வந்து சொன்னான்.

இதைக் கேட்டதும் ஸ்ருங்கின் மிகவும் கோபமடைந்து, ஏழு நாட்களுக்குள் பாம்புகளின் அரசனான தட்சகனால் பரீட்சித் கடித்துக் கொல்லப்படுவான் என்று சாபமிட்டான். 

சாபமிட்ட பிறகு, ஸ்ருங்கின் தன் தந்தையின் ஆசிரமத்துக்குச் சென்றான். இறந்த பாம்பு தோளில் போடப்பட்ட நிலையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். தான் பரீட்சித்துக்குச் சாபமளித்தது பற்றி அவரிடம் கூறினான்.

முனிவர் தன் மகனை இவ்வாறு கடிந்து கொண்டார்: 

“நீ செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. துறவிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

“நாம் அரசன் பரீட்சித்தின் நாட்டில் வாழ்கிறோம், அவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். அவன் நமக்குப் பாதுகாப்பு அளிக்காவிட்டால், நம்மால் அமைதியாகத் தவம் செய்ய முடியாது. 

“பரீட்சித் இங்கே வந்தபோது களைப்படைந்தும், தாகத்துடனும் இருந்தான். அவனுக்கு என் மௌன விரதம் பற்றித் தெரியாது. அவன் அவசரப்பட்டு நடந்து கொண்டான். அவனை நாம் மன்னித்திருக்க வேண்டும். 

“யாகங்களை அரசன் பாதுகாக்கிறான். யாகங்களால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மழை பொழியச் சொல்கிறார்கள். மழை நாம் வளர்ச்சி அடையத் தேவையான உணவை நமக்கு வழங்கும் மரங்களையும், செடிகளையும் வளர வைக்கிறது. 

“அரசன் இல்லாத நாடு துன்பப்படும். நீ அவசரத்துடனும், முதிர்ச்சியின்றியும் செயல் பட்டு விட்டாய்!"

ஸ்ருங்கின் கூறினான்: "நான் செய்தது சரியோ, தவறோ, நான் சொன்ன வார்த்தைகள்  உண்மையாகும். சாபத்தைத் திரும்பப் பெற முடியாது."

தன் குமாரன் இட்ட சாபத்தைப் பற்றி அரசன் பரீட்சித்துக்குத் தெரிவிப்பதற்காக குருமுகன் என்ற தன் சீடனை அரசனிடம் அனுப்பினார் சமிக முனிவர். 

அரண்மனைக்குச் சென்று அரசனைச் சந்தித்த குருமுகன் நடந்தவற்றை அரசனிடம் தெரிவித்தான்.

தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தைப் பற்றி பரீட்சித் அதிகம் கவலைப்படவில்லை. அந்த உயர்ந்த முனிவரின் மௌன விரதம் பற்றி அறியாமல் அவருக்குத் தவறிழைத்து விட்டோமே என்று மிகவும் வருந்தினான். 

பிறகு பரீட்சித் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து, அவர்கள் யோசனையின்படி, ஒற்றைத் தூணால் தாங்கப்பட்டு நிற்கும் ஒரு மாளிகையைக் கட்டினான். 

அந்த மாளிகைக்குள் பிறர் கண்ணில் படாமல் யாரும் நுழைய முடியாதபடி அது காவலர்களால் நெருக்கமாகக் காவல் காக்கப்பட்டது. 

அந்த மாளிகைக்குள் அந்தணர்கள் அமர்ந்து இடைவிடாமல் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அரண்மனைக்குள் நுழைய தட்சகன் ஒரு தந்திரம் செய்தான். 

சில பாம்புகளைத் தவசிகள் போல் வேடம் புனையச் செய்து, அரசருக்குப் பரிசளிக்கப் பழங்களுடன் அவர்களை அரண்மனைக்குள் நுழைய வைத்தான். ஒரு பழத்துக்குள் ஒரு சிறிய புழுவின் வடிவில் தட்சகன் ஒளிந்து கொண்டான். 

அந்தப் பாம்புகள் தவசிகள் போன்ற தோற்றத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து அரசனைச் சந்தித்தன.  

தன்னைக் காண வந்த தவசிகள் மீது சந்தேகம் கொள்ளாத அரசன் அவர்கள் தனக்கு அளித்த பரிசைப் பெற்றுக் கொண்டான். 

'தவசிகள்' சென்றதும், அரசன் தன் அமைச்சர்களுடன் சேர்ந்து அந்தப் பழங்களை உண்ணத் துவங்கினான். விதிவசமாக தட்சகன் ஒளிந்திருந்த பழத்தை அரசன் கையில் எடுக்க நேர்ந்தது. 

பழத்துக்குள்ளிருந்து ஒரு சிறு புழு வெளியே வந்து கொண்டிருந்ததை கவனித்த பரீட்சித், அந்தப் புழுவைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, தன் அமைச்சர்களிடம், "சூரியன் மறையப் போகிறது. சாபம் பலிப்பதற்கான நேரம் முடியப் போகிறது. இந்தப் புழு தட்சகனாக மாறி என்னைக் கடிக்கட்டும். அதன் மூலம் முனிவரின் வார்த்தைகள் உண்மையாகி, என் பாவமும் நீங்கி விடும்" என்றான். 

அங்கே கூடியிருந்த அறிவார்ந்த மனிதர்கள் அரசன் கூறியதை ஆமோதித்தனர். 

அரசன் பரீட்சித் அந்தப் புழுவை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக் கொண்டான். 

பரீட்சித் சிரித்துக் கொண்டிருந்தபோதே, தட்சகன் தன் உண்மை உருவை எடுத்துக் கொண்டு அரசனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டு அவனைக் கடித்து உடனே மரணமடையச் செய்தான். 

தட்சகனின் விஷத்தால் மாளிகை முழுவதும் தீப்பிடித்தது போல் எரிய, எல்லா அமைச்சர்களும் அங்கிருந்து எழுந்து ஓடினர். தட்சகன் வானில் எழும்பிச் செல்வதை அனைவரும் பார்த்தனர்.

பரீட்சித்தின் அமைச்சர்கள் அவனுக்கு இறுதிச் சடங்குகள் செய்த பின், அவனுடைய மூத்த மகனான ஜனமேஜயனுக்கு அரசனாக முடி சூட்டினர். ஜனமேஜயன் அப்போது சிறுவனாக இருந்தான். 

சிறிது காலத்துக்குப் பிறகு, ஜனமேஜயனுக்கு ஒரு வலுவான ஆதரவை உருவாக்க எண்ணி, அமைச்சர்கள் காசி தேசத்து அரசன் சுவர்ணவர்மனை அணுகி, அவனுடைய மகள் வபுஷ்டமாவை ஜனமேஜயனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டனர். 

அவர்கள் யோசனையை ஏற்றுக் காசி அரசன் தன் மகள் வபுஷ்டமாவை ஜனமேஜயனுக்குத் திருமணம் செய்து வைத்தான். 

திருமணத்துக்குப் பின் ஜனமேஜயன் பல இடங்களுக்கும் தன் மனைவியுடன் பயணம் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்தான். 

சிறிது காலத்துக்குப் பிறகு ஜனமேஜயன் தன் அமைச்சர்களிடம், தன் தந்தையைப் பற்றியும், அவருடைய பெருமைகளைப் பற்றியும் கேட்டான். 

பரீட்சித் அறவழியிலும், கருணையுடனும் ஆட்சி புரிந்த மிகச் சிறந்த அரசன் என்பதை அவர்கள் விவரித்தனர். 

பிறகு ஜனமேஜயன் அவர்களிடம் தன் தந்தை எவ்வாறு இறந்தார் என்று கேட்டான். 

அவர்கள் நடந்தவற்றை அவனிடம் விவரமாக எடுத்துக் கூறினர். 

பரீட்சித் தட்சகனால் கடிக்கப்பட்டு உயிர் நீங்கிய பிறகு, தன் மந்திர சக்தியால் அரசரை உயிர்ப்பித்து அவரிடம் வெகுமதி பெறலாம் என்று நினைத்து அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்த காஸ்யபர் என்ற அந்தணரை தட்சகன் வழியில் சந்தித்து, பரீட்சித்தை உயிர்ப்பித்தால் அவருக்குக் கிடைக்கக் கூடிய வெகுமதியை அவருக்குக் கொடுத்து அவரைத் திரும்பிச் செல்ல வைத்ததையும் அவர்கள் ஜனமேஜயனிடம் கூறினர். 

தட்சகனுக்கும், காஸ்யபருக்கும் இடையே நிகழ்ந்த சம்பவம் அமைச்சர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று ஜனமேஜயன் அவர்களிடம் கேட்டான். 

யாகத்தீக்குத் தேவையான விறகு வெட்டுவதற்காக ஆலமரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்த ஒரு மனிதன் தட்சகனும், காஸ்யபரும் பேசிக் கொண்டதைக் கேட்டதாகவும், அந்த மரத்தை தட்சகன் கடித்தபோது, மரத்துடன் சேர்ந்து அவனும் இறந்து விட்டதாகவும், காஸ்யபர் தன் மந்திரத்தால் எரிந்து போன மரத்தை உயிர்ப்பித்தபோது அவனும் உயிர் பெற்றதாகவும், நடந்தவற்றை அவன்தான் தங்களிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர்கள் கூறினர். 

தன் தந்தை தட்சகனால் தந்திரமாகக் கடித்துக் கொல்லப்பட்டதை அறிந்த ஜனமேஜயன் தன் தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்க விரும்பினான்.  

தன் தந்தை தட்சகனால் கடிக்கப்பட்ட பின் அவரை உயிர்ப்பிக்க எண்ணி  அரண்மனைக்கு வந்து கொண்டிருந்த காஸ்யபரை வழியிலேயே தடுத்து நிறுத்தி வெகுமதி அளித்துத் திருப்பி அனுப்பி விட்ட தட்சகன் மீது ஜனமேஜயன்ன் கடும் கோபம் கொண்டான். 

தான் பரீட்சித்தைக் கடித்துக் கொன்ற பிறகு காஸ்யபரால் பரீட்சித் உயிர்ப்பிக்கப்பட்டால், தான் ஒரு கேலிப் பொருளாகி விடுவோம் என்று நினைத்துதான் தக்ஷகன் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று ஜனமேஜயனுக்குத் தோன்றியது. தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்கும்படி ஜனமேஜயன் பாம்புகளின் மீது கோபம் கொண்டு அவற்றை அழிக்க முற்பட்டிருந்த உத்தங்கர் என்ற முனிவராலும் தூண்டப்பட்டான்.  

ஜனமேஜயன் தன் தலைமைப் புரோகிதரை அழைத்து, தன் தந்தையை விஷம் மூலம் எரித்த தட்சகனையும் மற்ற பாம்புகளையும் எரித்துக் கொல்ல வேண்டும் என்ற தன் எண்ணத்தை அவரிடம் கூறினான். 

சர்ப்ப யாகம் என்ற ஒரு சிறப்பான யாகத்தின் மூலம் பாம்பகளை அக்னி தேவதைக்கு உணவாகக் கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

அந்த யாகம் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு அத்தகைய யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யும்படி அரசன் அவருக்கு உத்தரவிட்டான். 

முறைப்படி சர்ப்ப யாகம்* நடத்தப்பட்டது. முனிவர்கள் கூறிய மந்திரத்தின் சக்தியால் பல பாம்புகள் யாகத்தீக்குள் ஈர்க்கப்பட்டு தீயில் எரிந்து சாம்பலாயின. 

ஆனால் ஆஸ்திகர் என்ற  முனிவர் தட்சகனை விட்டு விட வேண்டும் என்று ஜனமேஜயனிடம் கேட்டுப் பெற்ற வரத்தால் தட்சகன் காப்பாற்றப்பட்டான்!

யாகத்தில் வியாச முனிவர் கலந்து கொண்டார். 

தன் முன்னோர்களான பாண்டவர்களின் வரலாற்றைக் கூறும்படி ஜனமேஜயன் அவரை வேண்டினான். 

இந்த வரலாற்றை ஒரு புராணமாக முன்பே தொகுத்திருந்த வியாசர், தன் சீடரான வைஸம்பாயனரை அதைக் கூறும்படி பணித்தார். இந்த வரலாறு பின்பு மகாபாரதம் என்று பெயர் பெற்றது. 

இவ்வாறுதான் மகாபாரதக் கதை முதன் முறையாகப் பலர் முன் கூறப்பட்டது. இந்தக் கதையைக் கேட்டவர்களில் ஒருவரான உக்ரஸ்ரவர் என்ற முனிவர் பிறகு இதை நைமிசாரண்யம் என்ற காட்டில் தவம் செய்து வந்த முனிவர்களுக்குக் கூறினார். 

*ஜனமேஜயர் நடத்திய சர்ப்ப யாகம் குறித்த கதை மகாபாரதக் கதைகள் என்ற என் இன்னொரு வலைப்பக்கத்தில் விரிவாகக் கூறப்படும் (விரைவில்)

4. ஆதிபர்வம் - 2. தேவர்களும் அசுரர்களும்

 2. மகாபாரதம் - பின்னணியும் பெருமையும்